உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊராட்சி துணை தலைவருக்கு மிரட்டல்; தற்கொலைக்கு முயன்று வீடியோ வெளியீடு

ஊராட்சி துணை தலைவருக்கு மிரட்டல்; தற்கொலைக்கு முயன்று வீடியோ வெளியீடு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தடுத்தாட் கொண்டூரை சேர்ந்தவர் பச்சையப்பன், 30; ஊராட்சி துணைத் தலைவர். நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்து குடித்த இவர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று பச்சையப்பன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. அதில் அவர் கூறியிருப்பதாவது:எங்கள் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளராக உள் ளார். இவர், கடந்த ஓராண்டுக்கு முன் என்னை அணுகி, 'நீ மைனாரிட்டி ஜாதி, எங்கள் கட்சிக்கு வந்தால் உனக்கு பாதுகாப்பு. அரசியல் ரீதியாக வளர முடியும் என ஆசை வார்த்தை கூறி கட்சியில் சேர்த்தார்.பின், ஆர்ப்பாட்டம், போஸ்டர் என பல்வேறு வகையில் என்னை கட்சி செலவுகளை செய்ய வைத்தார். கடந்த 11ம் தேதி போஸ்டர் அடித்து, ஆர்ப்பாட்டம் நடத்த என்னிடம் பணம் கேட்டார். நான், என்னிடம் பணம் இல்லை. ஆர்ப்பாட்டத்திற்கும், போஸ்டர் அடிக்கவும் விருப்ப மில்லை என்றேன். உடன்,என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறினார்.இதனால் நான் கட்சியிலிருந்து விலகுவதாக கூறியதால் ஆத்திரமடைந்த அவர், 'எங்கள் கட்சியிலிருந்து விலகி விட்டால், எப்படி துணைத் தலைவர் பதவியில் இருப்பாய் என நான் பார்க்கிறேன்' என மிரட்டல் விடுத்தார்.அவர் மீதுகலெக்டர் மற்றும் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் பேசி உள்ளார்.இதனால் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி