உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமியை தோற்கடிக்க பன்னீர்செல்வம் உறுதி

பழனிசாமியை தோற்கடிக்க பன்னீர்செல்வம் உறுதி

பெரியகுளம் : முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு அமைப்பை துவக்கி நடத்தி வருகிறார். சமீபத்தில் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள் பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகின்றனர். நிர்வாகிகளின் கருத்துகளையும் அவர் கேட்டு வருகிறார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தங்கியிருந்த அவரை, திண்டுக்கல் மாவட்ட செயலர்கள் பசும்பொன், சுப்பிரமணியன், வைகைபாலன், சங்கரன்கோவில் மாவட்ட செயலர் மூர்த்தி பாண்டியன், தென்காசி, கன்னியாகுமரி உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பா.ஜ.,வுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த பன்னீர்செல்வத்தை பாராட்டிய அவர்கள், “அ.தி.மு.க.,வின் பழனிசாமிக்கு பாடம் புகட்டும் வகையில், வரும் தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும். அதற்கான எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்,'' என கூறியுள்ளனர். விரைவில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவர்கள் கூடிப் பேசி, 'தொண்டர்கள் கருத்துக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும்' என பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி