செங்கோட்டையன் செயல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்: சொல்கிறார் பன்னீர்செல்வம்
பெரியகுளம்:''செங்கோட்டையன் எண்ணம், செயல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவர் கூறியதாவது: துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் நல்லவர். அனைவரையும் அன்பாக அரவணைத்து செல்பவர். தேர்தலில் போட்டியிட அறிவித்தவுடனே அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு உறுப்பினர் ராஜ்யசபா எம்.பி., தர்மர், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தார். அ.தி.மு.க., இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என கடந்த 3 ஆண்டுகளாக கூறி வருகிறேன். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முழு முயற்சியாக அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என முன்னெடுத்துள்ளார். அவரது எண்ணம், செயல் வெற்றியடைய வாழ்த்துகிறேன். இதில் முன்னாள் அமைச்சர் தம்பித்துரை கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ''தமிழக பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன் நீங்கள் அழைத்தால் சந்திக்க தாயராக உள்ளதாக கூறியுள்ளாரே'' என நிருபர்கள் கேட்ட போது ''நயினார் நாகேந்திரனிடம் எனது அலைபேசி எண் உள்ளது ''என்றார்.