மேலும் செய்திகள்
வரும் 6ம் தேதி அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்
02-Nov-2024
சென்னை:சென்னையில் இன்று நடக்கவிருந்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூட்டம், மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பன்னீர்செல்வம் அறிக்கை:தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்றும், டெல்டா மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று சென்னையில் நடக்கவிருந்த, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. இக்கூட்டம், டிச., 7ல் காலை 10:30 மணிக்கு, சென்னை எழும்பூர், அசோகா ஹோட்டலில் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.***
02-Nov-2024