பன்னீர்செல்வம் சிங்கப்பூர் பயணம்
சென்னை: முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் நேற்று சிங்கப்பூர் சென்றார். ஒரு வார பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ள அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும், அங்குள்ள உறவினர்களையும் அவர் சந்திக்க இருப்பதாகக் கூறினர். ஏற்கனவே, கடந்த 2023 நவம்பரில், சிங்கப்பூருக்கு பன்னீர்செல்வம் சென்று, அங்கு ஒரு வாரம் தங்கியிருந்தார்.