உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெற்றோரே உஷார்: குழந்தைகளை தாக்கும் வாக்கிங் நிமோனியா அதிகரிப்பு

பெற்றோரே உஷார்: குழந்தைகளை தாக்கும் வாக்கிங் நிமோனியா அதிகரிப்பு

சென்னை: குழந்தைகளை தாக்கும் 'வாக்கிங் நிமோனியா' பாதிப்பு அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.காலநிலை மாற்றம் காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மார்பு சளியால் ஏற்படும், 'வாக்கிங் நிமோனியா' என்ற பாதிப்பு தற்போது அதிகரித்து உள்ளது. இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது: குழந்தைகளுக்கு சுவாச தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல், இருமல் அதிகம் ஏற்படுகிறது. மைக்கோபிளாஸ்மா நிமோனியா நோய்த் தொற்று உள்ளதா என்பதை அடையாளம் காண ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். தாமதமாக சிகிச்சை மேற்கொண்டால், தொற்று பாதிப்பு ஏற்படும். ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை நாங்கள் கண்டறிந்தோம். கடந்த 2 மாதங்களாக தான்,'வாக்கிங் நிமோனியா' பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. ஒரு குழந்தைக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் மற்றும் சளி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை இருந்தால் 'வாக்கிங் நிமோனியா' நோய்த்தொற்றுகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு டாக்டர்கள் கூறியுள்ளார்.

அறிகுறிகள் என்னென்ன?

குழந்தைகளை தாக்கும் 'வாக்கிங் நிமோனியா' பாதிப்பு ஏற்பட்டால், என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் டாக்டர்கள் கூறியதாவது:* சளி,* காய்ச்சல்,*இருமல்* சுவாச பிரச்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R S BALA
ஜன 20, 2025 13:49

ஒரு வித பீதியுடனே எப்போதும் மக்கள் வாழவேண்டும் போல..


Krishnamoorthy R
ஜன 19, 2025 23:28

௭ங்ககாலத்துலவாக்கிங்நிமோனியாவும் இல்ல ரன்னிங் நிமோனியாவும்இல்ல ஏன்னா நாங்க சத்தான சிறுதானியம் சாப்பிட்டோம் இப்ப நாம் இரசாயனத்தைதான் சாப்பிடரோம்


Ramesh Sargam
ஜன 19, 2025 13:08

புதிய புதிய வியாதிகள். காற்றுமாசு, வீதி எங்கிலும் தேங்கி கிடைக்கும் சாக்கடைகள், குப்பைகூளங்கள், இவைகளால்தான் அதிக நோய்கள் உருவெடுக்கின்றன. நாம் சுத்தமாக இருந்தால், நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால், நோய்களிலிருந்து நாம் தப்பிக்கலாம்.


Swaminathan
ஜன 19, 2025 12:55

அன்பு கூர்ந்து குழந்தைகளை மிக மிக பாதுகாப்புடன் வளர்க்கும் படி பெற்றோர்களைக்கேட்டு கொள்கிறேன். இந்த பொங்கல் விடுமுறையில் பொழுது போக்குக்காக பல இடங்களுக்குச் சென்று காணும் பொருள்கள் அனைத்தையும் வாங்கி தின்று வயிற்று போக்கு, வாந்தி போன்ற உபாதைகளையும் குழந்தைகள் அனுபவிப்பது பெரியோர்களுக்கு மன வேதனையைத் தருகிறது. பல பிரார்த்தனைகளுக்குபிறகு குழந்தைகளைப்பெற்று எடுத்து பின்னர் ஒழுங்காக அவர்களை வளர்க்காமல் இருக்கும் பெற்றோர்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.


Barakat Ali
ஜன 19, 2025 12:00

இறுதியாகச் சொல்லப்பட்டுள்ள இதே அறிகுறிகள் ஆஸ்த்மா, கோவிட்-19 ஆகிய நோய்களுக்கும் இருக்கின்றனவே ????


Velantex Ram
ஜன 19, 2025 10:13

கால நிலை மாற்றம் என்பது கம்பி கட்டும் கதை, ஆராய்ச்சி என்ற பெயரில் அரைகுறையாக வெளிவரும் வைரஸ்களால் (கொரோனா ) தான் பல நோய் பிரச்சினைகள் வருகிறது இதை புரிந்து கொண்டு கவனமாக ஆராய்ச்சிகள் செய்தால் நன்றாக இருக்கும்


Subedar Major Shenpahamurthi
ஜன 19, 2025 09:59

Excellent team work.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை