உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்ததால் பெற்றோர் அதிருப்தி

தி.மு.க., நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்ததால் பெற்றோர் அதிருப்தி

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சமத்துார் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை, 'நான் முதல்வன்' திட்ட நிகழ்ச்சிக்கு அனுப்புமாறு தி.மு.க.,வினர் கேட்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், மாணவர்களை நேற்று பள்ளிக்கு வரவழைத்தார்.மாணவர்கள் வந்த நிலையில், அது, அரசின் நான் முதல்வன் திட்ட நிகழ்ச்சி அல்ல என்றும், தி.மு.க., நகர இளைஞரணி சார்பில், 'திசை எங்கும் திராவிடம்' என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்கம் மற்றும் புதிய இளைஞர்கள் இணையும் விழா என, தெரிந்தது.இதனால், மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் திருப்பி அனுப்பினார்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.ஆடியோவில் பெற்றோர் கேள்விக்கு தலைமையாசிரியர், 'நான் முதல்வன் திட்ட நிகழ்ச்சி நடப்பதாக கவுன்சிலர் தெரிவித்தார். விருப்பம் உள்ள மாணவர்களை வர சொன்னோம். காலையில் போஸ்டர் பார்த்த பின், அது அரசு நிகழ்ச்சி அல்ல என தெரிந்ததும், மாணவர்களை வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினேன். இனி இதுபோல தவறு நடக்காது. மாணவர்களை நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டேன். கவுன்சிலரின் கணவர் விஜயகுமார் தான் மாணவர்களை அனுப்புமாறு கூறினார்' என, கூறுகிறார். இது குறித்து அறிந்த பா.ஜ., - அ.தி.மு.க., -- ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Selvaraj K
ஜூன் 15, 2025 21:11

தலைவர் கலைஞர் இருந்த வரை கட்சிக்கு நல்ல பேரு இருந்தது அவர் போன பிறகு எல்லாம் தலை கீழா மாறி போச்சு இதை பற்றி பேச ஒன்றும் இல்லை


Annamalai Sadiyappan
ஜூன் 15, 2025 17:33

திறமை எப்பொழுதும் அயோக்கியர்களின் கூடாரம் தி மு க.


Thravisham
ஜூன் 15, 2025 13:26

அந்த காலத்தில் த்ரவிஷன்களின் வேர் பதிந்த காலம் "இந்தி ஒழிக / இங்கிலீப்பீசு வால்க" இப்போ கள் ஒழிக டாஸ்மாக் வால்க" காலம். மாணவர்கள் ஏமாந்தாலும் பெற்றோர்கள் ஏமாற தயாரில்லை.


Ramesh Sargam
ஜூன் 15, 2025 13:16

மாணவர்களை அரசியல் நிகழ்ச்சிகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லக்கூடாது என்று நீதிமன்றம் தலையிட்டு தலையில்லா அரசியல்வாதிகளை கண்டிக்கவேண்டும்.


எஸ் எஸ்
ஜூன் 15, 2025 12:49

மதி (கெட்ட ) வதனி பேச்சை கேட்க மாணவர்களா? ஒரு காலத்தில் திறமையான பேச்சாளர்கள் இருந்த கட்சி திமுக. இப்போது பொய் சொல்லி மாணவர்களை அழைத்து நடத்த வேண்டிய நிலை. 2926க்கு அப்புறம் மதிப்பை இழக்கும்


GoK
ஜூன் 15, 2025 12:19

பார்த்தாலே வர படிப்பும் ஓடிரும்.


Bhaskaran
ஜூன் 15, 2025 11:52

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சை மாணவர்கள் கண்டிப்பாக கேட்டால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு போவது உறுதி .


Kasimani Baskaran
ஜூன் 15, 2025 10:43

அதான... திராவிட விஷத்தை மாணவப்பருவத்திலேயே புகுத்தி விட்டால் ...


V RAMASWAMY
ஜூன் 15, 2025 09:22

மாணவர்களை படிக்கவிடுங்கள், அவர்கள் வாழ்க்கையை குட்டிச்சுவராக அடித்தது போதும். பொற்றோர்களே, விழிப்புடனும் கண்டிப்புடனும் உங்கள் செல்வங்களை அரசியல் அரக்கர்களிடமிருந்து காப்பாற்றுங்கள். அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்தபின் அரசியலுக்கு செல்லலாமென்று அறிவுறுத்துங்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 15, 2025 08:44

இளைய தலைமுறையையும் நாசமாக்க வேண்டாமா ? ஆரியர்கள் ஏன் பதறுகிறார்கள் ??