உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 56 வயதில் இளைஞர் என்று கூறி கொள்பவருக்கான காலம் அல்ல; பிரதமர் மோடி விமர்சனம்

56 வயதில் இளைஞர் என்று கூறி கொள்பவருக்கான காலம் அல்ல; பிரதமர் மோடி விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இது இளைஞர்களின் காலம். 56 வயதில் இளைஞர் என்று கூறி கொள்பவருக்கான காலம் அல்ல, 28 வயதான இளைஞர்கள் விக்ரம்-1 திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போதைய பார்லிமென்ட் கூட்டத்தொடர் முக்கியம். கூட்டத்தொடர் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். பருவமழையும், மழைக்கால கூட்டத்தொடரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8f11yd55&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மிகப்பெரிய பெருமைவிக்ரம்1 திட்டம் வெற்றி வரலாற்று சாதனை. இந்த திட்டம் வெற்றி இந்தியர்களுக்கு மிகப்பெரிய பெருமை. இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப்கள் சாதனைகள் படைத்து வருகின்றன. விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை எல்லாம் நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. சவால்கள்விண்வெளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகின்றனர். உலகிலேயே சக்தவாய்ந்த ஹைட்ரஜன் ரயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள சவால்களை இந்தியா திறம்பட சமாளித்தது. இந்த போர் இந்தய வளர்ச்சியை தடுக்கவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

ராகுலை விமர்சித்த மோடி!

56 வயதான ராகுலை மறைமுகமாக பிரதமர் மோடி விமர்சித்து பேசியதாவது: இந்திய விண்வெளி துறையில் பெரும் உச்சத்தை தொட்டுள்ளோம். இது இளைஞர்களின் காலம். 28 வயதான இளைஞர்கள் ஸ்கைரூட் நிறுவனம் இணைந்து ராக்கெட்டை செலுத்தி உள்ளனர். 'ஸ்கைரூட்' எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்தக் குழுவின் சராசரி வயது வெறும் 28 வயது மட்டுமே என்று என்னிடம் கூறப்பட்டது. இத்தகைய இளைஞர்களே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். நான் 56 வயதுடைய ஒரு இளைஞரைப் பற்றிப் பேசவில்லை. 56 வயதில் இளைஞர் என்று கூறி கொள்பவருக்கான காலம் அல்ல. வெறும் ஒரு மாத காலத்திற்குள், நாடு பல மைல்கற்களை எட்டியுள்ளது; ஒவ்வொரு மக்களும் பெருமிதம் அளிக்கும் சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தியுள்ளது. தேசிய அளவிலோ, சர்வதேச அரங்கிலோ அல்லது இப்போது விண்வெளியிலோ இவை அனைத்தும் இந்தியாவுக்கு உண்மையிலேயே பெருமைக்குரிய தருணங்களாகும். கடந்த ஆண்டு பருவமழைக் கூட்டத்தொடருக்கு சற்று முன்பு, ஒரு இந்தியக் குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார். உலகில் மிகச் சில நாடுகளே தனியார் நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்புமுழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பேசும் தமிழன்
ஜூலை 20, 2026 22:38

. நாட்டு மக்கள் எப்படி ஏ‌ற்று‌க் கொள்வார்கள் ?


M Ramachandran
ஜூலை 20, 2026 20:11

இதெல்லாம் பையித்ய காரனுக்கும் நாட்டு துரோகிகளுக்கு அயல் நாட்டு கூலி வாகும் ஜனம்ங்க்ளுக்கும் வர்கள் தாயநாட்டின் மேலும் இந்தியாவிற்கு ஏஹ்டிரானா நாட்டின் மீது பாசம் வைத்திருக்கும் தலை இருந்தும் முண்டமாக இருப்பவர்களுக்கு புரியாது.


விருமாண்டி
ஜூலை 20, 2026 18:53

எம்.ஏ. ஆல் பொலிட்டிகல் சைன்ஸ் படிச்சா இதெல்லாம் தெரியவரும்.


இளைஞ்ன்
ஜூலை 20, 2026 17:13

75 வயசும் 56 இஞ்சும் இருக்கணுமாம்


விருமாண்டி
ஜூலை 20, 2026 16:40

ஈயத்தை பார்த்து இளிச்சதாம் பித்தாளை. The pot is calling the kettle black.


Modisha
ஜூலை 20, 2026 16:27

75 வயது இளைஞருக்கா .


Mario
ஜூலை 20, 2026 14:20

56 இஞ்சுகாண காலம் அல்ல: CJP


gopi
ஜூலை 20, 2026 14:52

மரியோ உனக்கும் CJP கு சுளுக்கு தான்


THE UNKNOWN MAN
ஜூலை 20, 2026 15:15

அப்பத்துக்கு மதம் மாறிய மரினோ உனக்கு எதாவது இருக்கா?


raju
ஜூலை 20, 2026 14:08

இவங்களுக்கு ராகுல் எப்பவுமே சிம்ம சொப்பனம் . பிரதமருக்கு அறிவு அதிகம்


Yaro Oruvan
ஜூலை 20, 2026 14:39

ஆத்தாடி.. சிம்ம சொப்பனம் இல்ல.. வெறும் சொப்பனம் அதுவும் தாய்லாந்து பட்டயா சொப்பனம் மல்லாந்து படுத்து விட்டத்த பாத்து விடுறதுக்கு பேரு கொட்டாவி


raju
ஜூலை 20, 2026 14:08

இவங்களுக்கு ராகுல் எப்பவுமே சிம்ம சொப்பனம் . பிரதமருக்கு arivu அதிகம்


Yaro Oruvan
ஜூலை 20, 2026 14:42

அவரு சொல்ல வர்றது சும்மா இளைஞ்சர் இளைஞ்சர்ன்னு 56 வயசுல கூவக்கூடாது.. உழைப்பு கடின உழைப்பு .. அத வுட்டுட்டு பேட்டி கொடுத்த்தமா பெட்டியை தூக்கிக்கினு பட்டயா போனோமா கவுந்து படுத்தோமான்னு இருக்கப்புடாது.. அத சொல்லவந்தா சொப்பன சுந்தரி சிம்ம ராசின்னு பெனாத்துற


Yaro Oruvan
ஜூலை 20, 2026 14:42

அவரு சொல்ல வர்றது சும்மா இளைஞ்சர் இளைஞ்சர்ன்னு 56 வயசுல கூவக்கூடாது.. உழைப்பு கடின உழைப்பு .. அத வுட்டுட்டு பேட்டி கொடுத்த்தமா பெட்டியை தூக்கிக்கினு பட்டயா போனோமா கவுந்து படுத்தோமான்னு இருக்கப்புடாது.. அத சொல்லவந்தா சொப்பன சுந்தரி சிம்ம ராசின்னு பெனாத்துற


Thirumal s S
ஜூலை 20, 2026 13:51

இவர் தனது மார்பை பற்றி சொன்னது 56 இன்ச்


முக்கிய வீடியோ