மேலும் செய்திகள்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
21-Sep-2026
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு விடுமுறை தினமான நேற்று, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்தனர். காவிரியாற்றில் நீர்வரத்து, 5,000 கனஅடியாக வந்தது. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்பதால், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பயணியர் குவிந்தனர். ஆயில் மசாஜ் செய்தும், மெயின் பால்ஸ், சினி பால்ஸ் மற்றும் காவிரியாற்றில் குளித்தும், மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர். மெயின் அருவி, மணல் திட்டு, பெரியபாணி, ஐந்தருவி வழியாக பரிசல்கள் இயக்கப்பட்டதால், காவிரியின் அழகை பயணியர் கண்டு ரசித்தனர்.
21-Sep-2026