உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பசும்பொன் வருவார் மோடி: பா.ஜ., தகவல்

பசும்பொன் வருவார் மோடி: பா.ஜ., தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குரு பூஜை விழா, வரும் அக்., 30ல் நடைபெற உள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் பங்கேற்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். மேலும், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பசும்பொன் வருவதாக, ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளி தரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ''தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பிரதமர் மோடி வர இருந்தார். பீஹார் சட்டசபை தேர்தல் காரணமாக அவரால் வர இயலவில்லை. தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி வருவார். ''தேவருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க, அதற்கான கமிட்டி விரைவில் முடிவு செய்யும். பா.ஜ.,வை பொறுத்தவரை, தேவர் நினைவிடத்தை தேசியமும் தெய்வீகமும் குடியிருக்கும் கோவிலாக நினைக்கிறோம்; அரசியலாக்க நினைக்கவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

மணிமுருகன்
அக் 26, 2025 22:53

தேவரை மனிதனாகக் கூட மதொக்காத அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணி ஒவ்வொரு வருடமும் துப்பாக்கிச்சூடு கலவரமாக்கும் கூட்டம் இந்த வருடம் ஏனோ ஒப்பாரி


Kannan Maravan
அக் 26, 2025 19:44

நீ உன்னை நல்வழிபடுத்திக்கொள். மற்றவர்க்கு உன் ஆலோசனை தேவை இல்லை.


sundarsvpr
அக் 26, 2025 16:25

தேவர் சமுதாயம் நடத்தும் குரு பூஜை என்பதாலும் பிரதமர்மோடி வருவதாலும் ஸ்டாலின் தலைமை அமைச்சர் என்பதால் கலந்துகொள்வார். பிரசாதம் விபூதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது அவசியம் இல்லை. மரியாதையுடன் கைகூப்பி பெற்றுக்கொள்ளாமல் இருப்பது தப்புயில்லை. பெற்று கொண்டால் அரசியல் நாடகம். விபூதி பெற்றுக்கொள்வது தவறு இல்லை. பெற்றுக்கொண்டு வேண்டியவர்களிடம் கொடுக்கலாம். துணைவியார் ஒரு பக்தை. பிரசாதத்தை பெற்றுக்கொண்டு வீட்டில் உள்ள மனைவியிடம் கொடுக்கலாம்.


Arul Narayanan
அக் 26, 2025 10:46

வட இந்திய பாணி பிரசாரத்தால் தமிழக ஓட்டுக்களை கவர முடியாது. கொள்கைகளை ஒத்தி வைத்து விட்டு திமுக பாணியில் இந்தி எதிர்ப்பு போன்ற போலியான கவர்ச்சியான பிரசாரங்களை மேற்கொண்டால் தான் இங்கே ஓட்டுக்கள் கிடைக்கும். அண்ணாமலையை அமைதி ஆக்கியது பெரும் பின்னடைவு.


Arul Narayanan
அக் 26, 2025 10:40

தேவர் ஓட்டுக்களை கவருகிறோம் என்று ஓவர் ஆக்ட் செய்தால் மற்ற சமூக ஓட்டுக்களில் சேதாரம் ஏற்படும். நயினாரை தலைவர் ஆக்கியதே போதுமானது.


T.sthivinayagam
அக் 26, 2025 09:55

எப்போதும் பிரதமர் அவர்கள் வந்து அறுபதாயிரம் கோடிக்கு நலத்திட்டங்கள் சொன்னா ஒரு வாரத்தில் எலக்சன் தேதி அறிவிப்பு வெளிவரும் இது என்ன புதிதாக உள்ளது என தொண்டர்கள் கேட்கிறார்கள்.


vivek
அக் 26, 2025 10:08

சொந்த கருத்து போடுது


அப்பாவி
அக் 26, 2025 09:15

ஏதோ நம்பளாலான ஜாதி ஓட்டுக்களை பீராய வாணாமா?


T.Senthilsigamani
அக் 26, 2025 08:26

நல்ல செய்தி ஆனால் இங்கு தேர்தல் வரும் வேளையில் பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் ,அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , அம்மா அதிமுக டி டி வி தினகரன், அதிமுக உரிமை குழு பன்னீர் செல்வம் ,தமாகா வாசன் என அனைவரும் கூட்டணியாக பசும் பொன் சென்றால் அதற்க்கு உடனே எதிர்வினை உண்டு ,ஆம் சமூக நீதி காப்பாளர்/சமத்துவ நாயகர் திமுக தலைவர் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மதிமுக வைகோ. தமிழக காங்கிரஸ் செல்வ பெருந்தகை, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெ.சண்​முகம் ,இரா .முத்தரசன் ,வி சி க திருமாவளவன் அனைவரும் திமுக தலைமையில் பசும் பொன் சென்று ஓட்டு வங்கியை தக்க வைத்து கொள்ளுவார்கள். ஆதலால் மோடிஜி பசும் பொன் வந்தாலும், ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக கூட்டணி தலைவர்கள் சென்று அவர் வருகையின் தாக்கத்தை மங்க செய்து விடுவார்கள் .இது தான் நிதர்சனம் . மோடிஜி வந்தாலும் ஒரு மாற்றமும் இருக்காது .ஸ்டாலினின் படைக்கலன்கள் சமூக நீதி ,சமத்துவம் ,பகுத்தறிவு ,சனாதன அழிப்பு ,மனுநீதி எதிர்ப்பு ,வருணாசிரம ஒழிப்பு .ஆதலால் திமுக தலைமையில் கூட்டணி தலைவர்கள் பசும் பொன் சென்றால் அது வரும் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் .இதை யாராலும் தடுக்க முடியாது .வெல்லும் திராவிட சமூக நீதி


Venugopal S
அக் 26, 2025 07:20

பாஜகவினர் அரசியல் ஆதாயத்துக்காக எந்த லெவலுக்கும் இறங்கி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள்!


vivek
அக் 26, 2025 08:22

வீணா போன உனக்கு டாஸ்மாக் இருநூறு போதுமே


Kasimani Baskaran
அக் 26, 2025 06:21

நிச்சயம் திருநீறை அழிக்க மாட்டார் என்று மட்டும் சொல்லலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை