உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடை மாற்றுவதை படம் பிடித்ததால் உதவியாளரை கொன்று கூவத்தில் வீசிய பவன் கல்யாண் கட்சி பெண்

உடை மாற்றுவதை படம் பிடித்ததால் உதவியாளரை கொன்று கூவத்தில் வீசிய பவன் கல்யாண் கட்சி பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆந்திராவில், பவன் கல்யாண் கட்சியின் பெண் நிர்வாகி, படுக்கை அறையில் உடை மாற்றும் காட்சியை படம் பிடித்த உதவியாளரை, கொலை செய்து சென்னையில் கூவம் ஆற்றில் வீசிய கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக, ஜனசேனா கட்சியின் பெண் நிர்வாகி உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசலு, 22; இவர், ரேணிகுண்டாவைச் சேர்ந்த நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி காளஹஸ்தி தொகுதி பொறுப்பாளரான வினுதா கோட்டா, 31, என்பவரிடம், கார் ஓட்டுநராக 2019ல் இருந்து பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், சென்னை, வால்டாக்ஸ் சாலை கூவம் ஆற்றில் ஸ்ரீனிவாசலு சடலம், கடந்த 8ம் தேதி மிதந்தது. இந்த சடலத்தை ஏழுகிணறு போலீசார் மீட்டபோது, அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ததற்கான காயம் இருந்தது.இதுகுறித்து ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர், சடலத்தை இழுத்து வந்து, கூவம் ஆற்றில் வீசி செல்வது தெரிந்தது. இதையடுத்து, அந்த நபர் வந்த காரின் எண்ணை வைத்து, விசாரித்தனர்.இந்த கொலையில் தொடர்புடைய நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஐ.டி., பிரிவு நிர்வாகியான திருப்பதி, காளஹஸ்தி மாவட்ட பெண் தலைவர் வினுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, திருப்பதியைச் சேர்ந்த உதவியாளர் கோபி, 24, கார் ஓட்டுநர் ஷேக்தாசன், 28, ஆகிய ஐந்து பேரும் திருப்பதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது.அங்கு சென்ற போலீசார், ஐந்து பேரையும் கைது செய்து, சென்னைக்கு நேற்று அழைத்து வந்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ஜனசேனாவுடன் கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ., பஜாலா சுதீர் ரெட்டியின் விசுவாசிதான் ஸ்ரீனிவாசலு. பஜாலா சுதீர் கூறியதற்காக, வினுதா கோட்டா வீட்டிற்கு வேவு பார்க்கும் வேலைக்கு சென்றுள்ளார்.அந்த வீட்டில் நடப்பதை பஜாலா சுதீரிடம் கூறிவந்த ஸ்ரீனிவாசலு, அவ்வப்போது வினுதா கோட்டாவின் அந்தரங்க புகைப்படங்களை, மொபைல் போனில் எடுத்து, அவருக்கு அனுப்பி வந்துள்ளார்.கடந்த மார்ச் மாதம், கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்த ஸ்ரீனிவாசலு, படுக்கை அறையில் வினுதா கோட்டா உடைமாற்றுவதை மொபைல் போனில் படம்பிடித்து உள்ளார்.இதை, வீட்டில் இருந்தோர் பார்த்து, ஸ்ரீனிவாசலுவை தாக்கினர். பஜாலா சுதீர் ரெட்டியின் அறிவுறுத்தல்படி இவ்வாறு செய்ததாக, அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, வினுதா கோட்டா, தன் கட்சி தலைமையிடம் புகார் அளித்தார். கட்சி தலைமை அவரை சமாதானப்படுத்தியது. பின் ஸ்ரீனிவாசலுவை எச்சரித்து அனுப்பி வைத்தது.எனினும், ஸ்ரீனிவாசலு மீது ஆத்திரத்தில் இருந்த வினுதா கோட்டாவும், அவரது கணவர் சந்திரபாபுவும், அவரை கடத்தி வந்து, தங்கள் வீட்டில் அடைத்து வைத்து, நான்கு நாட்களாக சித்ரவதை செய்துள்ளனர்.கடந்த 7ம் தேதி, ஸ்ரீனிவாசலு கழிப்பறைக்கு சென்று ஒரு மணி நேரமாகியும் வெளியே வராததால், சந்திரபாபு கதவை தட்டியுள்ளார். ஸ்ரீனிவாசலு, கதவை திறக்காமல் கழிப்பறையில் பயத்தில் உட்கார்ந்துள்ளார். அப்போது, சந்திரபாபுவும், கார் ஓட்டுநர் ஷேக்தாசனும், 'டிரில்லிங் மிஷின்' கொண்டு மரக்கதவை உடைத்து, இரும்பு சங்கிலியால், ஸ்ரீனிவாசலு கழுத்தை இறுக்கி கொன்றனர்.சடலத்தை அப்புறப்படுத்த சிவகுமார் மற்றும் கோபி ஆகியோரின் உதவியை நாடினர். நால்வரும் சேர்ந்து, காரில் சடலத்தை ஏற்றி, சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.அம்மாநில போலீசார் விசாரிக்கக்கூடாது என்பதற்காகவே, சென்னை ஏழுகிணறு கூவம் ஆற்று கரையோரமாக வீசியுள்ளனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

vee srikanth
ஜூலை 14, 2025 17:53

அந்த MLA வை பற்றி யாரும் எதுவும் சொல்லவவில்லையே


Anand
ஜூலை 14, 2025 11:31

தவறான வழியில் சென்றதிற்க்கான பலன், ஆனால் அப்படிப்பட்டவர்கள் இங்கு மட்டும் தப்பித்துக்கொள்வது ஏன்?


எஸ் எஸ்
ஜூலை 13, 2025 09:08

உடலை சென்னைக்கு கொண்டுவரும் போது போலீஸ்காரர்கள் கண்களில் இருந்து எப்படி தப்பினார்களோ?


Seekayyes
ஜூலை 13, 2025 08:54

வினாசகாலே விபரீத புத்தி. ஏன் அரசியல்வியாதிகள் சகவாசம்.


மூர்க்கன்
ஜூலை 14, 2025 12:16

கிழிஞ்சு போன தேய்ஞ்ச ரெகார்ட் மாதிரி ஒரே டயலாக் ?? சனாதன தர்மத்தை காக்கும் லட்சணம் இதுதானா பவன் , நாயுடு காரு???


Jey a
ஜூலை 13, 2025 08:41

ஏம்மா இப்ப தான் பெண்ணை படம் எடுப்பதால் கடும் சட்டம் இருக்கு, பேசாம மகளிர் காவல் நிலயத்துக்கு போனாலே போதும், இப்ப அதுவும் தேவை இல்லை, வீட்டில் இருந்து 101க்கு கால் பண்ணினாலே போதும் மீதியை காவல் தன் வேலையை செய்யும், உன் கிட்ட சட்டம் தோல் நிட்கும், இப்ப நீ சட்ட வீரோதியா ஆகிவிட்டய் ,,


நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 11:36

அந்த பெண்ணை பற்றிய முழுவிவரத்தையும், படத்தையும் போட்டு பப்லிசிட்டி தேடும் ஆட்சி காலத்தில் நீங்க பேசுவது வியப்பா இருக்கு


நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 07:55

அந்த பெண்ணை சார்ந்தோர் செய்ததில் தப்பே இல்லை


D Natarajan
ஜூலை 13, 2025 07:42

சரியான தண்டனை. கோர்ட்டுக்கு போனால் கேஸ் முடிய 20 ஆண்டுகள் ஆகும். அந்த பெண்ணிற்கு பத்ம ஸ்ரீ பட்டம் கொடுக்க வேண்டும்.


அப்பாவி
ஜூலை 13, 2025 06:30

அதானே. இதையே நிறைய காசு குடுத்து ஹீரோ பாக்குற மாதிரி சினிமா காட்சியா எடுத்திருந்தா நோ அப்ஜக்ஷன்.


Karthikeyan Palanisamy
ஜூலை 13, 2025 06:27

தப்பே இல்ல இப்படி பண்ணாதான் பயம் இருக்கும். காவல் துறையினரை நம்பி பிரயோஜனம் இல்லை.


sekar
ஜூலை 14, 2025 08:41

இப்ப ஜெயலில் இருப்பது சரியா ?


Kasimani Baskaran
ஜூலை 13, 2025 06:24

படுக்கை அறைக்குள் இருந்து படம் பிடிப்பது அவரவர் நீதியை பொறுத்து தீர்ப்பு சொல்லலாம். இ பி கோவின் படி அது கொலை செய்யுமளவுக்கு பெரிய குற்றம் இல்லை. வேண்டுமானால் கையை அல்லது காலை உடைத்து இருக்கலாம்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 11:38

மற்றொருவரின் படுக்கையறைக்கு எப்படி நீங்க போயி? ஒருவேளை உங்களின் படுக்கையறைக்குள் ஒருவன் நுழைந்து உங்களின் துணையின் அந்தரங்க படங்களை வலுக்கட்டாயமாக எடுத்து வெளியிடுகிறேன் என்றால் நீங்க கையை காலை மட்டும் உடைத்து நீதி தேடுவீர்களா? பெண்களின் மனதினையும் உணருங்க சகோ, போலீசில் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்றால் எங்களின் எல்லா விவரங்களையும் வெளியிட்டு எங்களை அசிங்கப்படுத்தும் ஆட்சியாளர்களை கொண்ட நாட்டில் நாங்க வாழ்கிறோம் என்பதனையும் மறக்காதீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை