உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தே.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்க்க விஜயுடன் பவன் கல்யாண் தரப்பு பேச்சு

தே.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்க்க விஜயுடன் பவன் கல்யாண் தரப்பு பேச்சு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழக வெற்றிக்கழகம் கட்சியை சேர்க்க, ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் தரப்பு பேச்சு நடத்தி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் தி.மு.க.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க் கட்சிகளையும், ஒரே கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். த.வெ.க.,வுக்கு, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் மட்டும் அல்லாமல், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வர வேண்டிய ஓட்டுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. இது, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும். எனவே, அ.தி.மு.க., கூட்டணியில், த.வெ.க.,வை சேர்ப்பதற்கான முயற்சியில், பா.ஜ., ஈடுபட்டது. இது தொடர்பாக, பா.ஜ., தரப்பில் இருந்து முதல் கட்டமாக, விஜயின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது.

தோற்பது உறுதி

அவர்கள் விஜயிடம் நேரடியாக பேச்சு நடத்துமாறு தெரிவித்தனர். அதற்கு பா.ஜ., தரப்பில் முற்சித்த போது, சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே, விஜய் வந்தாலும், அவருக்கு உறுதியாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும், சிறுபான்மையினர் சமூக ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு கிடைக்காது; அதனால், விஜய் வருகை பா.ஜ.,வுக்கு பெரியளவில் உதவாது என, மேலிடத் தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், விஜய் கூட்டணிக்கு வந்தால், தி.மு.க., தோற்பது உறுதி என, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகள், மேலிடத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களின் ஆலோசனைப்படி, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தரப்பில் இருந்து, அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணிக்கு வருமாறு விஜய் தரப்புடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. 'கட்சி துவக்குவது எளிது; அரசியலில் சாதுர்யமான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கவில்லை எனில் தொடர்ந்து தோல்வி தான் கிடைக்கும். நம்மை நம்பி வந்த கட்சியினருக்கு, அரசியலில் பதவிகள் கிடைக்காவிட்டால், அவர்கள் சோர்வடைவர். இதனால், கட்சி வளர்ச்சி பணி பாதிக்கப்படும்.

வெற்றி கிடைக்குமா?

ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தனி கட்சியை துவக்கினார். போகும் இடமெல்லாம் தொண்டர்கள் குவிந்தனர். ஆனால், தேர்தலில் தனித்து போட்டியிட்டு, தோல்வி அடைந்த பின், கட்சியை நடத்த முடியாமல், காங்கிரசுடன் கட்சியை இணைத்து விட்டார். பவன் கல்யாணும் கட்சி துவங்கி, பல ஆண்டுகளுக்கு பின் துணை முதல்வராகி உள்ளார். அவர், கடந்த சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்டு இருந்தால், தற்போது கிடைத்திருக்கும் வெற்றி கிட்டியிருக்குமா என்று உறுதியாக கூற முடியாது. சரியான நேரத்தில், ஆந்திராவின் பெரிய கட்சியான தெலுங்கு தேசம், பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தார். இதனால் அந்த கூட்டணி, அதற்கு முந்தைய தேர்தலில், மிகப்பெரிய வெற்றி பெற்று, முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்தியது. இதேபோல், தமிழகத்திலும் தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வரவும்' என, விஜய் தரப்புடன், பவன் கல்யாண் தரப்பு பேசி வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
ஜூலை 02, 2025 17:54

அரசியலில் அவர் முந்தாநாள் பெய்த மழையில் முளைத்த காளான், நம்மாள் நேற்று பெய்த மழையில் முளைத்த முளைத்த காளான், இரண்டும் டம்மி பீஸ்கள்!


vivek
ஜூலை 02, 2025 17:44

அட நம்ம காமெடி பிசு ஓவியரு எங்கப்பா


V RAMASWAMY
ஜூலை 02, 2025 10:40

இப்பொழுதுள்ள கட்சியைத் தோற்கடிக்க தேவையான ஒரு கூட்டணி. அகங்காரம், மமதை விடுத்து, பா ம க, தே தி மு க மற்றும் அவமானப்பட்டுக் கொண்டிருக்கும் ம தி மு க இவர்கள் தமிழகம் முன்னேற, ஊழல் ஒழிய, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் மனமொருமித்து ஒன்று சேர்ந்தால், அசைக்கமுடியாத, வலிமையான கூட்டணியாக அமைந்து தமிழத்திற்கு நல்லாட்சி கிடைக்கும்.


INFO @CTL
ஜூலை 02, 2025 11:12

சிரிப்பு


Anbuselvan
ஜூலை 02, 2025 10:11

சேரவே மாட்டார். அதை தவிர இவரை தனித்தது போட்டியிட செய்ய விட்டு திமுகவின் ஒரு சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பிரிக்க வைப்பதின் மூலம் அது அதிமுக தலைமையில் உள்ள NDA கூட்டணிக்கு பலமாக அமையும். இவருக்கு பதில் நாம் தமிழர் கட்சியின் சீமானை சேர்த்து கொள்ளலாம். அவர் நிபந்தனைகளை முன் வைத்து சேர்ந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அவரது 6.5% வாக்கு வாங்கி கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். சென்ற 2021 மற்றும் 2024 தேர்தல்களில் திமுக கூட்டணியை விட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ட்சிகள் வாங்கிய வோட்டு சதவிகிதம் வெறும் 5.6% மட்டுமே ஆகும். வெற்றி- வெற்றி win - win செயலாக மாறும் இது.


Barakat Ali
ஜூலை 02, 2025 09:16

பல தடவை சொல்லிட்டேன்.. அவரை அதிமுக கூட்டணியில் சேர்த்தா எங்க துக்ளக்கார் அவருக்கு ஆப்படிச்சுருவாரு .... ஏன்னா திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை உடைக்கத்தான் துக்ளக்கார் அவரை களமிறக்கியிருக்காரு ....


Padmasridharan
ஜூலை 02, 2025 08:50

அது கூட்டணி / தனித்து போட்டி என்றில்லை சாமி.. நடிகை ரோஜா பவனை திட்டியதால் இவர் ஜெயித்தார். பா.ஜ கட்சி நடிகர்களையே வைத்து ஜெயித்து கொண்டிருக்கிறார். இதில் வேற NOTA, இதை அழுத்துவதற்கு பதிலா விஜயம் செய்கிற கட்சிக்கு பொத்தானை அழுத்தி மற்ற கட்சியை அஸ்தமிக்க செய்யலாம்.


SIVA
ஜூலை 02, 2025 08:18

அனுபவஸ்தர் நல்லது சொன்னா யார் கேட்கிரார்க பார்க்கலாம் என்ன நடக்கும் என்று .......


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 02, 2025 07:03

கர்த்தரின் சீடர் விடியலின் வெற்றி உறுதி செய்ய பட்டு விட்டது, அடுத்து உதயம் அதற்கு அடுத்து இனியம் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.


முருகன்
ஜூலை 02, 2025 06:48

தமிழகத்தை பற்றி சிந்திப்பதால் வரும் தேர்தலில் பவன் கல்யாண் ஆந்திராவில் படு தோல்வி அடைவது உறுதி


நிக்கோல்தாம்சன்
ஜூலை 02, 2025 06:27

படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது , விஜய் இப்போது வரை இயக்கப்பட்டு கொண்டிருப்பது மதவாதிகள் , அவர்கள் விஜயை யோசிக்க விடுவார்களா ?