ஏர் ஏசியா விமானங்களில் கட்டண சலுகை அறிவிப்பு
சென்னை : சென்னையிலிருந்து கோலாலம்பூர், பாங்காக், புக்கெட் நகரங்களுக்கு செல்லும், 'ஏர் ஏசியா' நிறுவனம், கட்டண சலுகையை அறிவித்துள்ளது.விமான பயணியருக்கு, 'பிக் சேல்' சலுகையின் கீழ், சென்னையில் இருந்து மலேஷியாவின் கோலாலம்பூர்; தாய்லாந்தின் பாங்காக் மற்றும் புக்கெட் நகரங்களுக்கு, சிறப்பு கட்டணத்திலான ஒரு வழி பயணங்களை, ஏர் ஏசியா நிறுவனம் வழங்குகிறது.இந்த சலுகையின்படி பயணியர், 6,599 ரூபாய் முதல், ஒரு வழி பயணத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இதற்கு வரும், 23ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்தவர்கள், ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு, ஜூன், 15 வரையிலான காலத்தில் பயணம் செய்து கொள்ளலாம்.கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, airasia.comஎன்ற இணையதளத்தை பார்வையிடலாம்.