உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதியதாரர்கள் போராட்டம்

ஓய்வூதியதாரர்கள் போராட்டம்

சென்னை: ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இன்று (நவ.,25) ஓய்வூதியதாரர்கள், தர்ணா போராட்டம் நடத்தினர். சென்னை நந்தனம், நிதித்துறை வளாகத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், இன்று போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், ஓய்வூதியர்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு விதிமுறைகளை உருவாக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ‘ஓய்வூதிய சரி பார்ப்பு சட்டம் – 2025’ஐ திரும்பப் பெற வேண்டும்’ என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த தர்ணா போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ