உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரை முற்றுகையிட்ட தொகுதி மக்கள்!

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரை முற்றுகையிட்ட தொகுதி மக்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காஞ்சிபுரம், கோட்டூர் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரை வழிமறித்து, அவரது தொகுதி மக்கள் முற்றுகையிட்டனர். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என மக்கள் ஆவேச கேள்விகளை எழுப்பினர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு, அந்த தொகுதி எம்எல்ஏயும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப் பெருந்தகை நேற்று இரவு சென்றிருந்தார். அவர் வந்திருப்பதை அறிந்து அங்கு திரண்ட ஊர் மக்கள், அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். உடனே அந்த பகுதியில் இருந்து காரில் விரைந்து செல்ல செல்வப்பெருந்தகை முயற்சி செய்தார்.கூடியிருந்த மக்கள் காரை சூழ்ந்து கொண்டு, 'எம்எல்ஏ ஆகி இத்தனை நாட்கள் வராமல் தேர்தல் நெருங்கும் வேளையில் வந்தது ஏன்' என சரமாரியாக கேள்வி எழுப்பினர். சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மக்கள் சூழந்து கொண்டு கேள்விகளால் துளைத்ததால் தர்மசங்கடத்திற்கு ஆளான செல்வப்பெருந்தகை காரில் திரும்பி சென்றுவிட்டார். எம்எல்ஏவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கும் சூழலில் மக்கள் அதிருப்தியில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

நிக்கோல்தாம்சன்
டிச 31, 2025 20:59

mla என்ற பதவிக்கே இழுக்கு


VENKATASUBRAMANIAN
டிச 31, 2025 17:35

காசுக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான்.


V.Mohan
டிச 31, 2025 17:34

ஐயா தமிழக படித்த, கேள்வி கேட்கும் மிக குறைவான சதவிகித பொது மக்களே. சாதாரண பொது ஜனங்களுடைய ஞாபகங்களை பொசுக்கி புகைந்து போக செய்ய அரசியல் வாதிகள் தங்களிடமுள்ள சிறப்பான பொருட்களை மக்களுக்கு அளித்து வெற்றி பெறுவர் என்பதை கேள்வி கேட்கும் நீங்களும் மறந்து போனீர்களே. தூக்குசட்டியில் சூடான சிக்கன்/ மட்டன் பிரியாணி, டாஸமாக் சரக்கு, இரவில் மின் வாரியம் தயவில் கரண்ட் கட் பண்ணி , சூடம் அணைத்தவர்களுக்கு 5000 மோ 10000 மோ தந்து உங்கள் பகுதியின் ஒட்டுக்கள் விலைக்கு வாங்கப்படுமே மறந்துட்டீங்க போல.... மற்றபடி சிறுபான்மையினர் ஓட்டுக்கள் விழ, அவங்க முக்கியஸ்தர்களை தேர்தலுக்கு முன்னேயே குளிப்பாட்டி விடுவதால் அவிங்க அதீல் விழுந்து எழுந்து தேவையானவற்றை செய்திடுவாங்க. இது தானே கடந்த எலக்ஷன்களில் நடந்த இனியும் நடக்க போகிற விஷயங்கள். காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது ஐயா.


SUBRAMANIAN P
டிச 31, 2025 16:14

அதெல்லாம் இல்ல.. இப்போ கேள்வி கேப்பாங்க. தேர்தலுக்கு முன்நால 4 எலும்பு துண்டு போட்டா நாய் மாதிரி வலைஆட்டிகிட்டு ஓட்டுபோட்டிருவாங்க.. ஞாபக மறதி ஜென்மங்கள்.


mindum vasantham
டிச 31, 2025 16:03

கஞ்சாவை கடத்துவதில் செல்வப்பெருந்தகை கில்லாடி


Dv Nanru
டிச 31, 2025 15:36

இந்த முறை தி மு காவுக்கும் இதே நிலைமை தான் ...தொடரும் ..


Mohan das GANDHI
டிச 31, 2025 15:26

ஊழல் காங்கிரஸ் இம்முறை 2026 ல் டெபாசிட் இழக்கும்


Mohan das GANDHI
டிச 31, 2025 15:22

அணைத்து திமுக கூட்டணிகள் பொறுக்கிகள் ஒட்டுக்கேட்டு தொகுதிப்பக்கம் வெள்ளையும் சொள்ளையுமாக வந்தாலே, இனி மக்கள் காலில் அணியும் சாமானைக்கொண்டு அடித்துத் தான் அனுப்புவார்கள் தெண்டைக்கருமாந்திரங்கள் இந்த ஊழல் நாய்களே?


Nathansamwi
டிச 31, 2025 15:21

இந்த ஆளே ஒரு ரவுடி ...ரவுடி கட்சி தலைவரா இருந்தா உருப்படுமா ?


Mohan das GANDHI
டிச 31, 2025 15:17

இந்த ஊழல் காங்கிரஸ் பொய்யன் செல்வப்பெருந்தகையை மக்கள் செருப்பால் அடித்து அனுப்பியஇருக்க வேண்டும் ? இவன் திமுகவின் கைக்கூலி ஒற்றன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை