உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்

பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்

சென்னை: திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வரும் பிலால் ஹோட்டலில் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்தனர்.கடந்த 30ம் தேதி இரவு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் ஹோட்டலில் உணவு சாப்பிட்டவர்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7ti6qsn7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதற்காக, சென்ற போது, ஹோட்டல் மூடப்பட்டிருந்ததால், அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு செல்போனில் அழைப்பு விடுத்தனர். ஆனால், அந்த அழைப்பை எடுக்காததால், ஹோட்டலுக்கு அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்து சென்றனர். அதேபோல, அண்ணாசாலையில் மற்றொரு ஹோட்டலிலும் இதே பிரச்னை எழுந்ததால், அங்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sayeed fazal
ஏப் 03, 2025 11:44

சம்மந்தபட்டட மாநகராட்சி துறை இது பேன்ற சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு தகுந்த முன்னச்சறிக்கை நடவடிக்கை எடுத்து இது போன்ற சம்பவங்கள தடுக்க வேண்டும். புகார் வருவதற்கு காத்திரூந்து வந்த பிறகு சில் செய்வது பெரிய சாதனை. ஓட்டல்கள் மாமுல் payபண்ணும் வழகத்தை எப்படி ஒழிபபது


Ramesh Sargam
ஏப் 02, 2025 20:32

தற்காலிகமாகத்தான் சீல் வைத்திருக்கிறார்கள். இரவு பணப்பரிமாற்றம் ஆனபின்பு அந்த சீலும் அகற்றப்படும். நாளை மீண்டும் அதே பிரியாணி, சவர்மாவை சூடுபண்ணி விற்பார்கள். பிரியாணி, சவர்மா பிரியர்களும் ஆபத்தை உணராமல் மீண்டும் அதையே வாங்கி சாப்பிடுவார்கள். நம் மக்களை திருத்தவே முடியாது.


மணி
ஏப் 02, 2025 18:32

அழுகிய கறியை போட்டிருப்பர்


அப்பாவி
ஏப் 02, 2025 18:16

மூணு நாளக்கி முன்னாடி வெட்டுன சரக்கு இன்னும் விக்கலியா?


புதிய வீடியோ