உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்

முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்

பட்டிவீரன்பட்டி: சேவுகம்பட்டி டோல்கேட்டில் முன்னறிவிப்பின்றி வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டதால் சுற்றுப்புற கிராமத்தினர், விவசாயிகள் அதிருப்தி அடைந்து டோல்கேட்டை அடித்து சேதப்படுத்தினர்.திண்டுக்கல் குமுளி ரோடு அகலப்படுத்தும் பணி 2020 இல் முடிவடைந்தது. 2021 சேவுகம் பட்டியில் சுங்கவரி வசூலிப்பதற்காக டோல்கேட் அமைக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் சிலர் இருவழிச் சாலைக்கு டோல்கேட் கட்டணம் வசூலிப்பது கூடாது என கோர்ட்டில் தடையானை பெற்றதால் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2023 மீண்டும் வருவசூழிப்பு செய்ய ஏற்பாடுகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. அப்போதும் நிலக்கோட்டை டி.எஸ்.பி., ஆக இருந்த முருகன் ரோடு பணிகளை முழுமையாக முடித்துவிட்டு கட்டணம் வசூலிக்கலாம் என கூறியதால் வாகனங்கள் கட்டண வசூல் துவங்கவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=on1qazhx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று(மார்ச் 11) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மாவட்ட எஸ்.பி., நிலக்கோட்டை டி.எஸ்.பி., தாசில்தார், பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு மார்ச் 12 காலை 8 மணிக்கு சுங்கவரி கட்டணம் துவங்க இருப்பதால் பாதுகாப்பு வழங்கும் படி அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. இத்தகவல் சுற்றுப்புற கிராமத்தினருக்கு தெரிய வந்ததால் இன்று( மார்ச் 12) காலை 6 மணிக்கு டோல்கேட் வந்தனர்.8:30 மணிக்குள் கேமராக்கள், கம்ப்யூட்டர்கள், சென்சார் போர்டுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். அலுவலக கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டது. 8 மணிக்கு மணிக்குத் தானே துவக்க விழா என்பதால் அதிகாரிகள் தாமதமாக தான் வந்தனர். அதற்குள்ளாகவே டோல்கேட் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டது. இதை அடுத்து டோல்கேட்டில் வாகனம் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Jayapal
மார் 12, 2025 23:18

ஹா...ஹா... ஹா...


Perumal Pillai
மார் 12, 2025 20:43

நல்ல விஷயம் .


N Annamalai
மார் 12, 2025 20:11

படிக்காத மக்கள் சிறப்பான செயல் செய்து உள்ளார்கள்


Mohan Mg
மார் 12, 2025 19:55

முட்டாளா இருக்காதிர் அது நம் நாட்டின் சொத்து இங்கு நிக்கும் கூட்டம் காரில் செல்லும் கூட்டமா? 200 ரூபாய்க்கு போலீசுக்கு தெரிந்த செய்தி கஞ்சா வியாபாரிகளுக்கு தெரியப்படுத்தி அங்கு உள்ள சி சி டிவி கேமராக்களை உடைப்பதே நோக்கம்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மார் 12, 2025 18:43

பிஜெபி அரசுக்கு இது அவமானம். கேலலத்தின் உச்சம் நாடெங்கும் அநியாய டோல் கட்டண வசூல்.


வலங்கை
மார் 15, 2025 13:48

இது நமது தமிழக அரசுக்கு அவமானம். மாநில சாலைகளை பராமரிக்காமல் தேசிய நெடுஞ்சாலைக்கு தாரை வார்ப்பது மாநில அரசு... மாநில அரசுகள் வாங்கும் வாகன வரி மத்திய அரசுக்கு செல்வதில்லை...


தமிழன்
மார் 12, 2025 17:02

இதேமாதிரி நாடு முழுவதும் பகல் கொள்ளையை விட மோசமாக கொள்ளையடிக்கும் பல டோல்களை தீ வைத்து கொளுத்த வேண்டும்


nagendhiran
மார் 12, 2025 18:54

தற்குறி


நிக்கோல்தாம்சன்
மார் 12, 2025 20:53

தமிழகத்தில் பல டோல்கிட் திராவிட மாடல் அரசியல்வாதிங்களுடையது , தைரியம் இருக்கா?


சமீபத்திய செய்தி