உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தின் உரிமைகளைத் தரவில்லையென்றால், தமிழக மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g229tk62&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவரது அறிக்கை:

பார்லிமென்டில் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25ம் தேதி துவங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக, தி.மு.க., எம்.பி.,க்கள் முழங்கி இருக்கிறார்கள். தி.மு.க. எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள். நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்னைகளில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது.குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், லோக்சபா 54.5 விழுக்காடும், ராஜ்யசபா 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனையான செய்தி இருக்க முடியுமா? நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின்போது பா.ஜ., ஆட்சியின் கையில் பார்லிமென்ட் ஜனநாயகம் எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிர்காலக் கூட்டத்தொடரே சாட்சி. இதுதான் பா.ஜ., வின் பசப்பு அரசியல் ஆகும். தமிழக மக்கள் “நாற்பதுக்கு நாற்பது” என்ற தேர்தல் வெற்றியைத் தந்தபோது - “பார்லிமென்டிற்கு சென்று இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?' என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு, விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிக்கை, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துதல், சுங்கச்சாவடிகளை ஒழித்தல், நீட் தேர்வு முறைகேடுகள் இப்படி எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தின் உரிமைகளை எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள். இனியும் மத்திய அரசு திருந்தவில்லை என்றால், தமிழகத்தின் உரிமைகளைத் தரவில்லையென்றால் தமிழக மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

vbs manian
டிச 22, 2024 11:03

இது வரை எந்த தகுந்த பதிலடியும் கொடுத்ததாக தெரியவில்லை.


sundarsvpr
டிச 22, 2024 09:32

நரேந்திரன் தலைமை மத்திய அரசு மாற்றாந்தாய் போல் வஞ்சிக்கிறது என்பது உண்மையில்லையென்று என்று இதர கட்சிகள் மறுக்காதவரை தி மு க அரசை அசைக்கமுடியாது. உதயநிதி தான் ஒரு கிருத்துவன் என்று கூறிவிட்டார். இந்த அசாத்திய துணிவு. இந்த தைரியம் விஜய் ஜோசப் சீமான் வை.கோ போன்றோக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி நெற்றியில் திலகம் இடுவது அவர் நேர்மையை சுட்டிக்காட்டுகிறது. மதம் இல்லாமல் அரசியல் இல்லை. ஆனால் வெளியில் மதசார்பு அற்றவர் என்று கூறிக்கொள்வது. தன்னை ஏமாற்றிக்கொள்வதோடு மக்களையும் ஏமாற்றுகிறோம்.


P G Sundarrajan
டிச 22, 2024 07:28

நாங்களும் அதைத்தான் சொல்லுகிறோம். மக்கள் 2026 தேர்தலில் தங்கள் முடிவை உறுதியாக தெரிவிப்பர்கள். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காணாமல் போகும்.


அசோகா
டிச 22, 2024 07:27

ஆமா விடியலாரே 2026-ல் திராவிட மாடலுக்கு தக்க பதிலடி குடுப்பார்கள்


Balasubramanian
டிச 21, 2024 21:41

தன் வினை தன்னைச் சுடும் - என்பதில் இவருக்கு எத்தனை நம்பிக்கை? மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்கிறாரே!


Gokul Krishnan
டிச 21, 2024 20:58

முதலில் உங்கள் நட்பு கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியிடம் பேசி கேரளாவின் குப்பை கொட்டும் உரிமையாக தமிழகத்தை ஆக்க வேண்டாம்,நினைக்க வேண்டாம்...என்று சொல்லுங்கள்...


Vijay
டிச 21, 2024 20:19

சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள், தங்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிக்கும் அரசு ஊழியர்கள், மதத்தை தான்டி யோசிக்காத சிறுபான்மையினர், பணத்திற்கு ஓட்டு போடும் கும்பல் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். இதை மாற்றவே முடியாது.


Sainathan Veeraraghavan
டிச 25, 2024 12:11

மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வோட்டு போடுவது இருக்கும் வரை திமுக ஊழல் ஆட்சி தொடரும்


sridhar
டிச 21, 2024 20:06

நாங்களும் அப்படிதான் நம்புறோம். இந்த தீய ஆட்சி ஒழியும் என்று நம்புகிறோம்.


Dharmavaan
டிச 21, 2024 20:00

சுடலையின் பேச்சு கொலை செய்தவன் ஒப்பாரி வைப்பது போல இருக்கிறது திருட்டு ரௌடி கூட்டம் திமுக


Dharmavaan
டிச 21, 2024 19:48

அல்பத்துக்கு ஆசைப்பட்டு ஒட்டு போடும் மூடர்கள் இருக்கும் வரை நாடு நாசமாவதை தடுக்க முடியாது