உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி கணக்குகள் அனைத்தையும் மக்களே மைனஸ் ஆக்கி விடுவர்: விஜய் எச்சரிக்கை

கூட்டணி கணக்குகள் அனைத்தையும் மக்களே மைனஸ் ஆக்கி விடுவர்: விஜய் எச்சரிக்கை

சென்னை:'' கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை, கூட்டணி கணக்கு அனைத்தையும், 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் '', என த.வெ.க., தலைவர் விஜய் கூறினார்.சென்னையில் இன்று 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ' என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த புத்தகத்தை த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும், இரண்டாவது பிரதியை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவும் பெற்றுக் கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hx3v8y01&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தேர்தல் கமிஷனர்கள் நியமனம்

விழாவில் விஜய் பேசியதாவது: இன்று அம்பேத்கர் உயிரோடு இருந்து இருந்தால் என்ன நினைப்பார்? இன்றைக்கு இருக்கும் இந்தியாவை பார்த்து பெருமைப்படுவாரா? கவலைப்படுவாரா? அப்படியே வருத்தப்பட்டால் எதை நினைத்து வருத்தப்படுவார்? நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகம் காக்க அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பு கடமை, நம்மிடம் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்க வேண்டும். ஒரு மித்த கருத்து அடிப்படையில் தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

நடவடிக்கை இல்லை

இன்று மணிப்பூரில் நடப்பது அனைவருக்கும் தெரியும். அதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், நம்மை மேல் உள்ள ஒரு அரசு ஆட்சி செய்து கொண்டு உள்ளது. தமிழக அரசு எப்படி உள்ளது. தமிழகத்தில் வேங்கைவயலில் நடந்தது அனைவருக்கும் தெரியும். சமூக நீதி பேசும் அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்தது போன்று எனக்கு தெரியவில்லை.இவ்வளவு ஆண்டுகள் தாண்டி ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. இதையெல்லாம் பார்த்தால் அம்பேத்கர், வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.

உணர்வுப்பூர்வமாக

தினமும் நடக்கும் பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்திற்காக டுவீட் போடுவதும், சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்திற்காக மக்களோடு மக்களாக நிற்பதாக காட்டிக்கொள்வதும், சம்பிரதாயத்திற்காக மழைத்தண்ணீரில் நிற்பது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. ஆனால், சம்பிரதாயத்திற்காக நாமும் அதை செய்ய வேண்டியதாகி விடுகிறது. மக்கள் உரிமைகளுக்காக உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும்.

எச்சரிக்கை

தமிழக மக்களுக்கு எங்கு என்ன பிரச்னை நடந்தாலும் அவர்களுக்காக உரிமைகளுக்காக உணர்வுப்பூர்வமாக இருப்பேன். எப்போதும் அப்படியே இருப்பேன். மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காக பல வழிகளில் காத்து வரும் கூட்டணி கணக்கு அனைத்தையும், 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்.

அழுத்தம்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனால் இன்று வர இயலவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகள் மூலம் அவருக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என யூகிக்க முடிகிறது. அவரின் மனது முழுவதும் நம்முடன் தான் இருக்கும்.இவ்வாறு விஜய் பேசினார். விழாவில், விகடன் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், வி.சி.க., துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

S. Neelakanta Pillai
டிச 07, 2024 22:33

எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் சம்பிரதாயத்திற்காக செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி என்றால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலுவலகத்தில் வரவழைத்து இனாம் வழங்கியது சம்பிரதாயத்திற்கு. இது தேரவே தேறாது. கூட்டணி அமைக்க யாரும் காசு வாங்க கூடாது அதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் சம்பிரதாயத்திற்கு செய்ய வேண்டியிருக்கிறது என்பதால் நான் காசு வாங்கினேன் என்று சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவர் அரசியலைப் பற்றி தெரிய வேண்டும் என்று சொன்னால் ஒரு நடிகர் என்ற முறையில் ரஜினிகாந்த் அணுகலாம் மற்றபடி இவர் மக்கள் பணி செய்ய எதற்கும் லாயக்கு இல்லாதவர்


Ms Mahadevan Mahadevan
டிச 07, 2024 13:49

எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லும் டயலாக்குகள்யே சொல்லி திரிகிறார். தைரியமாக டாஸ்மாக் ஒழிப்பேன் அரசு கல்வி கூடங்களில் தரமான கல்வி, அரசு மருத்துவமனைகளில் எந்நேரமும் தரமான மருத்துவம், குடிநீர் சாலை வசதிகள் அரசு அலுவலங்களில் லஞ்சம் இல்லாமை கனிமவள கொள்ளை இல்லாமை தருவேன் என்றும் ஜாதி மத சலுகைகளை தவிர்த்து அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு உண்டு என்றும் சொல்லி வாக்கு வாங்கி பதவிக்கு நேர்மையான முறையில் வர வேண்டும். அதை விடுத்து இப்படி மலிவான அரசியல் பேசினால், இவரும் குட்டையில் உறிய மட்டை தான்.


Barakat Ali
டிச 07, 2024 08:55

மணிப்பூர் ஒரு வருடமாகத்தான் இப்படி என்று அறிவாளி விஜய் நினைக்கிறார் .... அவருக்கு யாராவது பிரச்னைகளை புரிந்து கொண்டு அதன் பின்னர் அது பற்றி பேசவேண்டும் என்று சொல்லுங்கள் ...


sridhar
டிச 07, 2024 08:19

என்ன பெரிய மணிப்பூர் , நீ தூத்துக்குடி , நெல்லை , குமரியில் உங்க ஆளுங்க செய்யற அசிங்கத்தை பத்தி பேசு.


VENKATASUBRAMANIAN
டிச 07, 2024 07:57

தூக்கத்தில் இருந்து இப்போதுதான் எழுந்து வந்துள்ளார். தூக்க கலக்கம் இருக்கும்.


vadivelu
டிச 07, 2024 07:32

மணிப்பூரில் நடப்பது உங்களுக்கே சரியாக தெரியாது, இதில் அனைவருக்கும் தெரியும் என்கிறீர்களே


rajan_subramanian manian
டிச 07, 2024 06:53

மணிப்பூர் பற்றி பேசுகிறார். மணிப்பூரில் நடைபெறுவது இன கலவரம்.மலை வாழ் மக்களான குக்கிக்கும் சமவெளியில் உள்ள மெய்ட்டிக்கும் நடக்கிறது. என்னதான் போலீஸ் மற்றும் ராணுவத்தை கொண்டு பாதுகாத்தாலும் அவர்கள் சண்டை நடந்து கொண்டுதான் இருக்கும் அவர்களாக சமாதானம் ஆகாதவரை.மோடி போய் பார்த்தாலும் ,பார்லிமென்டில் பேசினாலும் பப்பு ட்ரிப் அடித்தாலும் நடக்காது.ஆட்சி மாறி ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்து கொஞ்சம் அடக்கலாம். ஜோசப் விஜய் அங்குள்ள குக்கி சமூகத்துக்கு ஆதரவு தருவார்.ஏனெனில் டீஎன்ஏ அப்படி. அம்பேத்கர் ,பெரும்பான்மையான சிறுபான்மை,பெரியாரை வைத்து உருட்ட இன்னும் ஒரு கட்சி.மன்னிக்கவும் கழகம். தமிழ்நாடு உருப்பட கண்ணுக்கெட்டிய தூரம் வரை விடியல் இல்லை.


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 06:48

இங்கே கலந்துகொள்ள முடியாத அளவுக்கு திருமாவளவனுக்கு அழுத்தம் இருக்கும் .... அவரின் மனது முழுவதும் நம்முடன் தான் இருக்கும்...... பத்த வெச்சுட்டியே பரட்டை ....


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 06:46

அரசியலமைப்பு குறித்து விஜய்க்கு என்ன தெரியும் ????


J.V. Iyer
டிச 07, 2024 05:04

தீய திராவிட குடும்ப கட்சியில் இருக்க விருப்பப்படாதவர்கள் எங்கள் கட்சியில் சேருங்கள் என்று அறைகூவல் விடுக்கும் மக்கள் தலைவர் விஜய்க்கு பாராட்டுக்கள். இவர் கட்சியிலும் பெரியார் இருக்கிறார். ஆனால் கடவுள் மறுப்பு இல்லை. திருநீறு அணிந்து ஹிந்துக்களை எதிர்க்கலாம். பின்னே எதற்கு கவலை?