மேலும் செய்திகள்
40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
13-Nov-2024
சென்னை:'சவால்களை கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்த சவால்களை களைவதே நம் கடமை' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை:அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு, மாற்றுத்திறனாளிகள் தலைமைத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை, இந்த ஆண்டுக்கான உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கருப்பொருளாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும், நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு, அரசு செயலாற்றி வருகிறது. சவால்களை கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்த சவால்களை களைவதே நம் கடமை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
13-Nov-2024