உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி தே.மு.தி.க.,வினர் பேரணி!

அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி தே.மு.தி.க.,வினர் பேரணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் நோக்கி, தே.மு.தி.க.,வினர் பேரணி சென்றனர்.மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தே.மு.தி.க., சார்பில் குருபூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்துக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rp6x0vn1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விஜயகாந்தின் குருபூஜையில் பங்கேற்குமாறு முதல்வர் ஸ்டாலின் முதல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் பேரணி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, போலீசாரின் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்று காரணம் காட்டி, தே.மு.தி.க.,வின் அமைதிப் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் நோக்கி, தே.மு.தி.க.,வினர் பேரணி சென்றனர்.போலீசாரின் இந்த செயல் குறித்து தே.மு.தி.க., துணை செயலாளர் பார்த்தசாரதி கூறுகையில், ' குருபூஜையை முன்னிட்டு பேரணி நடத்த டிச.,5ம் தேதி அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. வேண்டுமென்றே பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 5 அல்லது 10 நாட்களுக்கு முன்பு பதில் கூறியிருந்தால் கோர்ட்டுக்கு சென்றிருப்போம். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? காவல்துறை காழ்ப்புணர்ச்சியா? ஒரு மணி நேரத்தில் அனுமதி வழங்க நடத்த முதல்வர் அனுமதி வழங்க வேண்டும். அப்படியில்லையெனில், தடையை மீறி பேரணி செல்வது குறித்து பொதுச்செயலாளர் பிரேமலதா முடிவு செய்வார்,' எனக் கூறினார். நடிகர் ராஜேந்திரன் கூறுகையில், 'தி.மு.க.,வின் கூட்டணி கட்சியினர் நடத்தும் பேரணிக்கு மட்டும் உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. தே.மு.தி.க., பேரணி நடத்தினால் மட்டும் கோயம்பேட்டில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமா? விஜயகாந்த் எல்லோருக்குமான தலைவர். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும்,' எனக் கூறினார். தடையை மீறி மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகம் வரை பேரணி நடத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையொட்டி, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

jayvee
டிச 28, 2024 19:30

விஜயகாந்தை நினைத்தாலே ... வருகிறதா ? அந்த பயம் இருக்கணும்


அப்பாவி
டிச 28, 2024 19:23

பேரணியாப் போகாம நடந்தே போனாங்களாம்.


என்றும் இந்தியன்
டிச 28, 2024 19:16

Criminal terrorist பாஷா ஊர்வலத்திற்கு அனுமதி இந்த அமைதி பேரணிக்கு மறுப்பு. இதைத்தான் திருட்டு திராவிட மாடல் என்பது. ஜார்ஜ் பொன்னையன் சொன்ன வார்த்தை மாற்றப்படவேண்டும் இப்படி-கிறித்துவ முஸ்லீம் பிச்சை அரசு இது.


Bala
டிச 28, 2024 12:52

கிரிமினல் அல் உமா பாட்ஷா இறுதி ஊர்வலத்துக்கு அனுமதி கொடுப்பார்கள் இந்த ஓட்டு பிச்சை எடுப்பவர்கள். நல்ல மனிதன் விஜயகாந்த் அவருக்கு மறுப்பு. வெட்கெங்கெட்டவர்கள்.


vijai
டிச 28, 2024 15:24

திராவிட மாடல் இப்படி தான் இருக்கும் நல்லவருக்கு காலமில்லை


vijay
டிச 28, 2024 12:24

தீவிரவாதிக்கு, நன்றாக நினைவில் கொள்ளுங்கள். கோவை குண்டுவெடிப்புக்கு காரணகர்த்தாவான அந்த நபர் ஒரு தீவிரவாதி. அந்த ஆளுக்கு போற்றி சென்ற அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி, அடிமை கூட்டணி தொலைவர்கள் திருமா போன்றவர்கள் எப்படி அந்த இறந்த தீவிரவாதிக்கு எப்படியெல்லாம் முட்டு கொடுத்து பேசினாப்புல என்று உலகமறியும். திருமா சார்ந்த சமூக மக்களுக்கு எனது வேண்டுகோள், உங்களது தலைவனை, கேவலமான புத்தியை, பதவிக்கும், வோட்டுக்கும், தேர்தலின்போது கிடைக்கும் பெட்டிக்கும் ஆசைப்படும் செயல்களை, எண்ணங்களை, குறுக்குப்புத்தியை, பலமுறை பார்த்தும், உனது தலைவனின் கேவலமான வோட்டுவங்கி புத்தியை உணரவில்லை என்றால், நீங்கள் மனிதர்களாக பிறந்ததற்கு அர்த்தமில்லை. விலங்குகள் கூட புரிந்துகொள்ளும். உங்களை ஏமாற்றி பிழைக்கும் தலைவனை தேர்தலில் புறக்கணித்தாலே போதும்.


N.Purushothaman
டிச 28, 2024 11:02

எது எதுக்குத்தான் தான் அனுமதி மறுப்புன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போயிடுச்சி ....தமிழகத்தில் சர்வாதிகார காட்டாட்சி நடக்கிறது ...தீவிரவாதி இறுதி ஊர்வலம் காவல்துறை முன்னிலையில் இறுதி ஊர்வலம் ...இனியாவது தமிழக மக்கள் விழித்துக்கொள்வார்களா ?


அப்பாவி
டிச 28, 2024 09:43

விடியல் ஆட்சி, நீதிமன்றம், போலீசை இன்னுமா நம்புறீங்க?


sankaranarayanan
டிச 28, 2024 09:41

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் கலந்து கொள்வதாக இருந்திருந்தால் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும்.


Murugesan
டிச 28, 2024 09:37

கேவலமான கேடுகெட்ட காவல் துறை கட்டுமரம் நினைவு நாளுக்கு மட்டும் அனுமதி ,தமிழக காவல்துறை திமுககாரனின் கொத்தடிமைகள், மானங்கெட்ட பிழைப்பு


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 28, 2024 09:26

இறந்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக இவரைப்பற்றி உயரவாக பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.


Vijay
டிச 28, 2024 16:21

சரி அப்ப உதயநிதி பற்றி பெருமையா பேசு


jayvee
டிச 28, 2024 19:31

உங்கள் கருத்து தவறு ..பல திராவிட தலைவர்கள் இருந்த பின்னர்தான் அவரை பற்றிய உண்மைகளை மக்கள் பேசத்துவங்கியுள்ளனர்...அதில் உயர்வே இல்லை.. ஏனென்றால் உயர்வே இல்லையே


rama adhavan
டிச 28, 2024 22:08

பலன் பெற்றவர்களை கேளு.


சமீபத்திய செய்தி