உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து வழக்கு ஓய்வு ஏ.டி.எஸ்.பி.யிடம் விசாரிக்க அனுமதி

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து வழக்கு ஓய்வு ஏ.டி.எஸ்.பி.யிடம் விசாரிக்க அனுமதி

துாத்துக்குடி:தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 சாட்சிகள் உள்ள நிலையில், இதுவரை 78 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது. சார்பு நீதிபதி பிஸ்மிதா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஏ.டி.எஸ்.பி., பெருமாள்சாமியிடம் குறுக்கு விசாரணை நடந்தது.அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் 8 முறை நடத்திய குறுக்கு விசாரணை நேற்றுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து, அமைச்சர் தரப்பில், லஞ்ச ஒழிப்புத் துறையில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., தங்கசாமி என்பவரிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அனுமதி அளித்த நீதிபதி பிஸ்மிதா, வழக்கின் விசாரணையை டிச. 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை