உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேரூர் ஆதினம் நுாற்றாண்டு விழா சிவாலயங்களில் தேவார பண்ணிசை

பேரூர் ஆதினம் நுாற்றாண்டு விழா சிவாலயங்களில் தேவார பண்ணிசை

சென்னை:''பேரூர் ஆதினத்தின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுதும் பிரசித்தி பெற்ற, 15 சிவன் கோவில்களில், தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது,'' என, தென் கைலாய பக்தி பேரவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் கூறினார். சென்னையில், அவர் அளித்த பேட்டி: கோவை பேரூர் ஆதினத்தின் நுாற்றாண்டு விழாவையொட்டி, தேவாரம் என்ற அற்புதக் கொடையை, நமக்கு அருளிச் சென்ற, 'தேவார நாயன்மார்களுக்கு' நன்றி உணர்வை வெளிப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில், தேவாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழகம் முழுதும் பிரசித்தி பெற்ற, 15 சிவன் கோவில்களில், தேவார பண்ணிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி பள்ளி யை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், தமிழகத்தின் நான்கு திசைகளிலும், நான்கு குழுவாக பிரிந்து, தேவார பண்ணிசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். கோவை, பேரூர் ஆதினத்தில் நேற்று நிகழ்ச்சி துவங்கியது. இன்று கோவை காமாட்சிபுரம் ஆதினம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் ஆகியவற்றில், தேவார பண்ணிசை நடைபெற உள்ளது. நாளை கோவை மாவட்டம், சிரவை ஆதினம், சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவில், 20ம் தேதி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை