உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் கல்வெட்டை பாதுகாக்க மனு

திருப்பரங்குன்றம் கல்வெட்டை பாதுகாக்க மனு

திருப்பரங்குன்றம்:மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேல் செல்லும் பாதையில், பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள கல்வெட்டுகளை பாதுகாக்க கோரி, அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலர் ராமலிங்கம், கோவில் நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார். அவர் கூறியதாவது:மலைமேல் செல்லும் படிக்கட்டுகளின் துவக்க பகுதியின் இடதுபுறம் தமிழிலும், வலதுபுறம் ஆங்கிலத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. ஆங்கில கல்வெட்டில் உள்ள எழுத்துகள் சேதம் அடைந்து உள்ளன.தமிழ் கல்வெட்டில், 'ஸ்ரீ முருகன் மலைப்படி' என்ற தலைப்பில், சென்னை சட்டசபை மெம்பர் அண்டு திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து போர்டு சேர்மன் ஸ்ரீ எஸ்.சின்னக்கருப்ப' என்ற எழுத்துகள் மட்டும் தெளிவாக தெரிகின்றன.சில ஆண்டுகளுக்கு முன், ரோடு சீரமைப்பு பணியின்போது கல்வெட்டின் பின்பகுதி எழுத்துக்கள் மறைக்கப்பட்டு விட்டன. திருப்பரங்குன்றம் மலை, முருகன் மலை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ள பல்வேறு ஆதாரங்களில் இந்த கல்வெட்டும் ஒன்று.எனவே இதை பாதுகாக்கவும், சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை தேவை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sivakumar Thappali Krishnamoorthy
ஜன 23, 2025 11:58

மதுரை முன்னாள் அமைச்சர் திரு அழகிரி அவர்களுக்கு திருப்பரங்குன்றம் பிரச்னை தெரியாதா? இது பற்றிய அவருடைய கருத்து மதுரை நிருபர்கள் வெளியிட ஏதேனும் தடை உண்டா?


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 23, 2025 01:50

ஒரு இடத்தையும் கலவரம் இல்லாம இருக்க விட்டு வைக்க மாட்டீங்களாடா?


V GOPALAN
ஜன 23, 2025 08:14

பிரியாணி பயலே


சமீபத்திய செய்தி