உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடிக்கு 10 ஆண்டு சிறை

கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடிக்கு 10 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி 'கருக்கா' வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2023, அக்., 25ல், சென்னை கிண்டியில் உள்ள, கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக, கிண்டி போலீசார், நந்தனம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத், 42, என்பவனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5fgoq6dk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவனின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள், கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இவன் மீது, 680 பக்கத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.வழக்கு விசாரணை முடிந்த நிலையில், வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும், தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

சிட்டுக்குருவி
நவ 12, 2025 23:03

இதைத்தான் அடிக்கடி வலியுறுத்துகிறேன் .நாட்டில் மத்திய குற்றபிரிவு ,மாநில குற்றப்பிரிவு இரண்டும் ஒரேநேரத்தில் குற்றங்களைவிசாரிக்கும் அமைப்புவேண்டும் .அப்போது குற்றங்களை விசாரிப்பதில் குறைகள் ஏற்படாது .இரண்டு அமைப்புகளும் தனித்தனியே நடவடிக்கையெடுக்கவேண்டாம் .ஆனல் ஒரு அமைப்பு நடவடிக்கை எடுக்கதவிறினால் மற்றஅமைப்பு நடவடிக்கை எடுக்கலாம் .இது மேலைநாடுகளில் நடைமுறையில் உள்ளது .


Gnana Subramani
நவ 12, 2025 23:00

மத்திய அரசு என் ஐ ஏ வை இது போன்ற சில்லறை வழக்குகளுக்கு உபயோகிக்காமல், எல்லைப் பாதுகாப்பில் கவனம் செலுத்த வைத்து இருந்தால் டெல்லி கார் வெடிப்பை தவிர்த்து இருக்கலாம்


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 12, 2025 21:22

வீசியதும் வெடித்ததும் பெட்ரோல் குண்டு அல்ல என்று அன்று காவல்துறையே இந்த போராளிக்கு வக்காலத்து வாங்கிச்சே .


தமிழ்வேள்
நவ 12, 2025 20:34

சிறையில் கறிசோறு பிரியாணி போடுவதை நிறுத்தி மூன்று வேளையும் உப்பில்லாத கஞ்சி மட்டுமே ஊற்றி கடும் உழைப்பை வற்புறுத்தி சுரண்டி எடுத்தால் மட்டுமே தமிழக சிறைகள், சிறைகளாக இருக்கும்..இல்லையேல் இவை நிஜமாகவே மாமியார் வீடுகள் ஆகி விடும்


Rajkumar Ramamoorthy
நவ 12, 2025 20:29

பாவம் அதிக தண்டனை .


visu
நவ 12, 2025 20:18

இவர் ஒரு நீட் போராளி ஹஹ்ஹ


Natchimuthu Chithiraisamy
நவ 12, 2025 20:04

பெட்ரோல் குண்டுக்கு 10 ஆண்டுகள் சிறை வீசிய தூரம் 10 அடி. அவனுக்கு கஞ்சிக்கு வழி கிடைத்து விட்டது பாவம் ரோட்டில் பிச்சை எடுப்பவனை பிடித்து 10 ஆண்டுகள் சோறு போடுவது புண்ணியம்.


theruvasagan
நவ 12, 2025 19:50

பொறந்த நாளைக்கு விடுதலை செய்து சால்வை போர்த்தி கட்டிப்பிடித்து நீட் போராட்ட தியாகி பென்ஷன் கூட குடுப்பாங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 12, 2025 19:06

பொறந்த நாளைக்கு வெளியே வரலைன்னா பத்து வருஷம் தண்டச்சோறு நிச்சயம் .....


V Venkatachalam, Chennai-87
நவ 12, 2025 19:43

பொறந்த நாள்? அதுக்கு வெளியே வரமுடியாது. ஆட்சி மாறிடும். ஒரு வேளை ஜெயில் வைத்து தீர்த்து கட்டினாலும் ஆச்சரியமில்லை. மக்கள் வரிப்பணம் இவனுக்கு செலவிடக்கூடாது.


சிட்டுக்குருவி
நவ 12, 2025 19:04

இப்போதெல்லாம் சிறைவாசம் என்பது செலவில்லாமல் சொகுசு பங்களாவில் இருப்பதைப்போன்றது .ஏல்லாவசதிகளைம் பெறமுடிகின்றது .விதவிதமான உணவுவகைகள் வேறு என்னவேண்டும் .வெளியில் இருந்தால் நம்ம காசு செலவு .அதனால்தான் குற்றங்கள் ஒரு பொருட்டே அல்ல .யாராவது விடுதலையாகும் போது 16 வயதினிலே கார்த்திக் சோர்ந்து உடல் மெலிந்து மனம் நொந்து கட்டைவண்டியில் வருவதை போன்ற காட்சியை பார்த்திருக்கின்ரீர்களா ?குற்றங்கள் குறையாமல் இருப்பதற்கு பழையகாலத்தில் போன்று களிமட்டுமே உணவாக அளிக்கவேண்டும் .மக்கள் வரிப்பணத்தில் சிறையில் சொகுசுவாழ்க்கைக்கூடாது .மறுபடியும் நாம் சிறைக்குவரக்கூடாது என்ற மனப்பான்மையை தூண்டுவதாக இருக்கவேண்டும் .


முக்கிய வீடியோ