உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவியை அடித்த உடற்கல்வி ஆசிரியர் கைது

மாணவியை அடித்த உடற்கல்வி ஆசிரியர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - பாகலுார் சாலையில் எலுவப்பள்ளி அருகே உள்ள யோகிவேமனா பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த, 23ல் நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள, ஜான் போஸ்கோ அரசு உதவி பெறும் பள்ளி மாணவியர், 14, 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பெற்றனர்.இதில், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விளையாடிய, 14 வயது, 9ம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறைக்கு சென்ற போது, கைக்கடிகாரம் ஒன்றை கீழே இருந்து எடுத்தார். அப்பள்ளி ஆசிரியை, தன் கைக்கடிகாரத்தை மாணவி திருடியதாக குற்றஞ்சாட்டினார். மாணவி அதை மறுத்தார்; ஆசிரியை நம்பவில்லை.ஜான்போஸ்கோ பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன், 30, மாணவியின் தாய்க்கு போனில் விபரத்தை கூற, அவர், தன் மகளை கண்டிக்குமாறு கூறியதால், தியாகராஜன், யோகிவேமனா பள்ளிக்கு வெளியே, அனைத்து மாணவியர் முன்னிலையில், மாணவியை பலமாக அடித்தார். இந்த வீடியோ நேற்று பரவியது.இதையறிந்த ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் ரமாவதி, ஜான்போஸ்கோ பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்களிடம் நேற்று விசாரணை நடத்தினார். பள்ளி நிர்வாகம் தியாகராஜனை, 'சஸ்பெண்ட்' செய்தது. தியாகராஜன் மீது, மாணவியின் தாய் பாகலுார் போலீசில் புகார் செய்யவே, தியாகராஜன் நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி