உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருள் வழங்க திட்டம்

 முக அங்கீகாரம் வாயிலாக ரேஷன் பொருள் வழங்க திட்டம்

சென்னை: ''வரும் காலங்களில், 'பேஷியல் ரெககனைசேஷன்' எனப்படும், முக அங்கீகாரம் வாயிலாக, ரேஷன் பொருட்கள் வழங்க திட்டம் உள்ளது,'' என, உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார். சென்னையில், அவர் அளித்த பேட்டி: சேமிப்பு கிடங்குகள், நெல் கொள்முதல் செய்யப்படும் இடங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. நெல்லை, அரிசியாக மாற்றும் அரவை ஆலைகளின் உரிமையாளர்களிடம், தரமான அரிசியை வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு மாதத்திற்குள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய அரிசியாக கிடைக்கும். அனைத்து பொருட்களும் தரமாக கிடைக்கும். வரும் காலங்களில் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிலுவையில் இல்லாமல் வ ழங்கப்படும். வரும் காலங்களில் முக அங்கீகாரம் வாயிலாக, ரேஷன் பொருட்கள் வழங்க திட்டம் உள்ளது. முதல்வர் விஜயிடம் கேட்டு, தொழில்நுட்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sivagiri
ஜூலை 14, 2026 09:21

ஜெராக்ஸ் காபியை காமிச்சு வாங்க முடியாதா , ? . . . முன்னாடி ரேஷன் கார்ட்-ல் கீயுஆர் கோட்ஐ ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு ரேஷன் கடைகாரர்கள் கொள்ளை அடித்தனர் , கைரேகை முறை வந்தவுடன் , வேற வேற டெக்கினிக்குகள் கண்டுபிடிச்சிட்டாங்க . . . ஒருவர் ஜீனி மட்டும் வாங்கும் போது அதை க்ளோஸ் பண்ணாமலே , ரெடிமேட்ஆக போட்டு வைத்திருக்கும் ஒருகிலோ ரெண்டு கிலோ அஞ்சு கிலோ பத்துகிலோ , மூட்டைகளை , தராசில் வைத்து வைத்து எடுத்து விட்டால் அந்த எடைக்கு அவருக்கு மற்ற ஜாமான்கள் போட்டுவிட்டதாக கணக்கில் ஏறிவிடும் , அந்த சரக்குகளை வியாபாரிகளுக்கு , ஓட்டல்களுக்கு விற்றுவிடுகிறார்கள் , இப்படி மாதாமாதம் , ஒரு லம்ப் அமௌன்ட் அடிச்சிடறாங்க , . .. முகம் என்றால் ரொம்ப சௌகரியம் . .. ஒரு தடவை செல்போனில் முகத்தை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டால் , அப்பறம் அந்த ஆள் தேவையே இல்லை , இந்த வீடியோவை போட்டே எல்லா ஜாமான்களும் சைடில் போயி விடும் . . .


முக்கிய வீடியோ