உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர் தரக்குறைவு பேச்சால் பிளஸ் 1 மாணவர் தற்கொலை

ஆசிரியர் தரக்குறைவு பேச்சால் பிளஸ் 1 மாணவர் தற்கொலை

தஞ்சாவூர்: சக மாணவியுடன் பேசியதை கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர், மாதாக்கோட்டையை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களின் மகன் ஸ்ரீராம், 16. தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று காலை வெகு நேரமாகியும், ஸ்ரீராம் தன் அறையை விட்டு வெளியில் வரவில்லை. சீனிவாசன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மருத்துவக் கல்லுாரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஸ்ரீராம் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், 'பள்ளி வகுப்பறையில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தேன். ஆசிரியர் சிம்காஸ்ராஜ், சக மாணவர்கள் முன் தரக்குறைவாக தகாத வார்த்தையில் திட்டினார். இதனால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இதையடுத்து, மாணவரின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியரை கைது செய்ய கோஷமிட்டனர். எஸ்.பி., ராஜாராம், தமிழ் பல்கலைக்கழக போலீசார் பேச்சு நடத்தினர். பின், ஆசிரியர் சிம்காஸ்ராஜை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 01, 2025 07:00

எழுத்தறிவித்தவன் இறைவன் ...மாணவன் தவறாக நடப்பதாக உணர்ந்தாள் நல்ல அறிவுரைகள் கூறி மாணவர்களை திருத்துவதுதான் ஆசிரியர் கடமை ..அதற்குத்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது ..ஒருமாணவன் சாகும் அளவிற்கு திட்டும் உரிமையை யார் கொடுத்தார்கள் ..ஆசிரியர்கள் எங்கெங்கோ ஏற்படும் மன அழுத்தங்களை வடிகட்டும் வடிகாலாக மாணவர்களை நினைக்கின்றனர் .இன்று நம் பேசும் பேச்சுக்கள் , உடுத்தும் உடைகள் , அனைத்தும் நல்லாசிரியர்களை பார்த்து சிறு வயதில் கற்று கொண்டதுதான் .மாணவனை சாகடித்த அந்த முறைகெட்ட ஆசிரியருக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கவேண்டும் ..


Varadarajan Nagarajan
ஜூலை 01, 2025 06:53

மகனை இழந்துவாடும் பெற்றோருக்கு ஆழந்த இரங்கல். இது மிகவும் சோகமானது மற்றும் மிகவும் துரதிஷ்ட்டவசமானது. அதேநேரம் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. இதுபோன்ற முடிவுகளால் பிள்ளைகளை ஆசிரியர்கள் கண்டிக்கமுடியவில்லை. ஒழுக்கத்தை கடைபிடிக்க மாணவர்களுக்கு யார்தான் சொல்லிக்கொடுப்பது.


முக்கிய வீடியோ