உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்

 இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்

சென்னை: தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், இன்று காலை 9:30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளி யிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:30 மணிக்கு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அரங்கில் வெளியிடப்பட உள்ளது. அதேநேரம், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தி யாக முடிவுகள் அனுப்பப் படும். மாணவர்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறியலாம். அத்துடன், 'www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in' ஆகிய இணையதளங்களில், மாணவர்களின் பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம். அதேபோல், வாட்ஸாப்பில், 78452 52525 என்ற எண்ணிற்கு 'Hi' என செய்தி அனுப்பி, துறையின் பெயர் என வந்ததும், 'Directorate of Government Examinations' பிளஸ் 2 என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின், மாணவரின் தேர்வெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்தால், ரிசல்ட் வெளியாகும். மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு, ஆலோசனை மையங்களில், '14417, 104, 14416' என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை