உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச பெட்ரோலிய சந்தையை மாற்றிய பிரதமர் மோடியின் முடிவு: துக்ளக் ஆண்டு விழாவில் பாராட்டு

சர்வதேச பெட்ரோலிய சந்தையை மாற்றிய பிரதமர் மோடியின் முடிவு: துக்ளக் ஆண்டு விழாவில் பாராட்டு

சென்னை: அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி, பிரதமர் மோடி ரஷ்யாவில் இருந்து பெட்ரோலியம் வாங்க முடிவு செய்தது, சந்தையை முற்றிலும் மாற்றிவிட்டதாக துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.துக்ளக் 55வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குரு மூர்த்தி பேசியதாவது:பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார். நம் நாட்டில் இருக்கிறாரா? இல்லையா? என்று கிண்டலடித்தனர். ஆனால், 78 நாடுகளுக்குச் சென்றார். இதுவரை போகாத நாடுகளுக்கெல்லாம் போனார்.அதனால் தான் உலக அளவில் பாரதத்திற்கு பெயரும், நெருக்கமும் கிடைத்துள்ளது. முஸ்லீம் நாடுகளோடு நெருங்கிய நட்பு கொண்ட நாடு என்ற நிலைமையும், அதன் மூலமாக பொருளாதார எழுச்சியும் ஏற்பட்டுள்ளது.அமெரிக்கர்களை நம்பாத அளவுக்கு சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், நமது நாட்டிடம் ஆலோசனை கேட்கிறார்கள். இதனை யாரும் பெரிதாக பேசுவதில்லை. அமெரிக்காவும், இந்தியாவுக்கும் எலியும் பூனையும் போன்ற உறவு உள்ளது. நட்பும், எதிர்ப்பும் சேர்ந்தது தான் உறவு என்று சோ சொல்வார். எந்த நாட்டிடமும் நட்பு மட்டுமே உள்ளது என்றோ, எதிர்ப்பு மட்டும் இருக்கிறது என்றோ சொல்ல முடியாது.உக்ரைன் விவகாரத்தில் நாம் நடுநிலையாக இருப்போம் என்று 2 மணி நேரத்தில் பிரதமர் மோடி முடிவு எடுத்தார். இதனால், பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்தது. அதை மீறி ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் வாங்க முடிவு செய்தோம்.இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. அவரது முடிவால் உலக பெட்ரோலிய சந்தையே மாறிவிட்டது.உக்ரைன் போருக்கு முடிவுகட்டும் நிலையில் உள்ளவர் மோடி என்பதை அவர்களே கூறுகிறார்கள். தீர்க்கமான, துணிவான மற்றும் தன்னலமற்ற தலைவர் மோடி. அதனால் தான் கடந்த 7 ஆண்டுகளாக உலகின் பிரபலமான தலைவராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். ஆனால், நம் நாட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவர் மீது மண்ணை வாரி வீசுகிறார்கள். முன்பெல்லாம் அரசியல் கூட்டணி அமையும் போது, அதற்கு ஒரு கொள்கையும், தலைமையும், போக்கும் இருக்கும்.அப்போது காழ்ப்புணர்ச்சி இல்லை. இந்திரா எமெர்ஜென்சியை கொண்டு வந்த போது கூட கொள்கை ரீதியாக அவரை எதிர்த்தார்கள். இப்போது மோடி மீது அபாண்டங்கள் கூறுவது போல் நடக்கவில்லை.எதிர்க்கட்சி தலைவர் வெளிநாட்டிற்குச் சென்று நம் நாட்டிற்கு எதிராகப் பேசுகிறார். தேச விரோத சக்திகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார். பங்குச் சந்தையில் நிலையற்ற நிலையை உருவாக்குகிறார். இதெல்லாம் அரசியலைத் தாண்டி பிரதமருக்கு நேரடியான சவாலாக உள்ளது. இவ்வாறு ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

venugopal s
ஜன 15, 2025 19:05

இந்த மாதிரி எல்லாம் பேசுவதற்கு தானே இவருக்கு காசு கொடுத்து வைத்திருக்கிறோம்!


Mr Krish Tamilnadu
ஜன 15, 2025 15:22

உழைப்பவன் உயர வேண்டும். வறுமை இல்லாமல் போக வேண்டும். என விலைவாசி விண்ணை தொடுகிறது. கூலி மணி கணக்கிற்கு மாறி கொண்டு இருக்கிறது. மதியுள்ளவன் எல்லாம் பொருள் வாங்க யோசிக்கிறான். உழைப்பவன் உற்சாகமாக செலவு செய்கிறான். சேமிப்பு என்பதே காலாவதி ஆகி விடும் போலும்.‌ அனைவருக்கும் லோன். 10 லட்சத்தை 20 வருடத்தில் 20 லட்சமாக கட்ட வேண்டும் என்பதே தெரியாமல் கடன் வாங்குகிறார்கள். சமைத்த, சமைக்காத உணவு பொருள்களின் விற்பனை மட்டுமே ஜோராக நடைபெறுகிறது. மற்ற பொருட்களின் விற்பனை படுத்து விட்டது. ஜிஎஸ்டி வரி விகிதத்தை விட, வணிகனின் லாப விகிதம் குறைந்து விட்டது. பண்பாடு, கலாச்சார நிகழ்வுகளும் ஏதோ காரணங்களை சொல்லி தடை செய்ய படுகின்றன. எங்கே செல்லும் இந்த பாதை?.


Sampath Kumar
ஜன 15, 2025 10:37

உலக பொருளாதார நெருக்கடி 2007 2008 இல் உலகை அச்சுறுத்திய மையத்தில் மறந்த பொருளாதார மேதை மன்மோகன் சிங்கத்தின் திறமையில் இந்திய பொருள்தரம் காக்கப்பட்டு டாலர்க்கு வரும் 40 ரூபாயில் நிப்பாடிய பெருமை மன்மோகன் சிங்க் அவர்களை சேரும் ஊசி மணி போன்ற பிஜேபிகளுக்கு அவரின் ரூமை தெரிய வாய்ப்பு இல்லை மோடி குஜராத்துக்கு மட்டுமே இதன் மந்திரி என்று உலகத்துக்கே புரிகிறது பிஜேபி காரனுக்கு முட்டும் புரியாது அம்புட்டும் மூளை சால்வை செய்யப்பட்ட விஷ ஜந்துக்கள்


ஆரூர் ரங்
ஜன 15, 2025 13:36

அப்போ 200 ரூபாயை தியாகம் செய்து விட்டு (ஸ்டாலின்) சார் கிட்ட பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி யில் சேர்க்க ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள் . இரண்டும் தானா விலை குறையும்.


Kumar Kumzi
ஜன 15, 2025 14:40

பார்ர்ரா ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போடுற கொத்தடிமை உலக பொருளாதாரத்தை பற்றி பேசுற


Sampath Kumar
ஜன 15, 2025 10:31

வந்துட்டாரு உலக பொருளாதார மேதை உங்க கண்ணனுக்கு ரஷ்யா மற்றும் அரபு நடைகள் தான் தெரிகின்றது ஆயில் உற்பத்திசெயும் எத்தனையோ நடுகல் உலகில் உண்டு அவைகள் எல்லாம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மார்க்க வேடம் அமெரிக்கா நினைத்தால் பொருள்தர தடை கொண்டுவந்தால் ரஷ்யா காலி அரபு நாடுகளும் காலி அப்போ என்ன சொல்ல்வேர்கள் உங்க சாணக்கிய திறன் சாணி திறனாகிவிடும்


Kumar Kumzi
ஜன 15, 2025 14:34

ஓங்கோல் துண்டுசீட்டு கொத்தடிமை கூமுட்ட ஓசிகோட்டருக்காக ஊளையிடுவது புரிகிறது ...


Velan Iyengaar
ஜன 15, 2025 09:47

ரஷியா/புடின் மீதான பொருளாதார தடையினை சுற்றிவளைத்து நீக்கிக்கொள்ள இந்தியாயவை உபயோகித்துக்கொண்டு அதாவது தன் நிறுவனத்தை மற்றும் இந்தியாவை ஆளும்வர்க்கத்துக்கு நெருக்கமான எண்ணெய் நிறுவனங்களை கொழிக்கவைக்க போடப்பட்ட திட்டத்தை இந்த மாதிரி மார்க்கெட்டிங் செய்துகொள்ளும் கபடவேலையை நிறுத்த வேண்டும் .....ரஷிய கச்ச எண்ணையை குறைந்தவிலைக்கு வாங்கி இந்தியர்களுக்கு அதிக விலையில் விற்கவும் வெளிநாடுகளுக்கு எண்ணெய் பொருட்களை இந்திய தயாரிப்பு என்ற போர்வையில் விற்று புடினை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்ற்றிவிட்டு அம்பானியை ருயாவை கொழிக்கவைத்துள்ளதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ....


Velan Iyengaar
ஜன 15, 2025 09:39

என்ன செய்து என்ன பிரயோஜனம்?? நமக்கு நூறு ரூபாய்க்கு மேலே தான் பெட்ரோல் கிடைக்குது வாய் மட்டும் சர்வதேச அளவுல நீளும் போவியா...புடின் நிறுவனம் .... ரூயா நிறுவனம் .... அம்பானி நிறுவனம் ..... கொழிக்க போட்டுக்கிட்ட வியாபாரத்த இப்படியும் சொல்லலாமோ ????


GoK
ஜன 15, 2025 10:27

உங்களுக்கு இருக்கும் பொதுநிதி, பொருளாதார அறிவைக்கொண்டு உங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால் உங்களை விவரமில்லாத ஆள் என்று மட்டும் நினைப்பார்கள். ஆனால் இந்த மாதிரி உளறினால் அந்த விவரமில்லாத்தனத்தை உறுதி செய்வீர்கள்.


ஆரூர் ரங்
ஜன 15, 2025 10:37

மத்திய அரசு மூன்று முறை பெட்ரோல் டீசல் விலையை குறைத்து விட்டது. ஆனால் விடியல் தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை. சிலிண்டர் மானியமும் கொடுக்க வில்லை. பொங்கல் பரிசைக் காணவில்லை. பெட்ரோலுக்கு அதிக வரி விதித்து விலையேற்றத்துக்கு மாநில அரசே முக்கிய காரணம் .


Velan Iyengaar
ஜன 15, 2025 12:10

பெட்ரோல் விலையை குறைத்துவிட்டது என்று சொல்ல ஒரு மனசாட்சி வேண்டும்.. 60 க்கு விற்றுக்கொண்டிருந்தபோது இதே உலகமாக பணக்கார தேர்தல்பத்திர மெகா ஊழல் bj கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது 62 ஆக உயர்த்தியபோது என்ன என்ன மாதிரி ஏசினீர்கள் என்பது பொதுவெளியில் இன்னமும் இருக்கு என்பதை மறந்துவிடாதீர். விலையை அநியாயத்துக்கு உயர்த்திவிட்டு பேருக்கு சிறிதளவு குறைப்பது எல்லாம் விலை குறைப்பில் சேருமா அறிவிலி? கச்சா எண்ணெய் சர்வதேச விலையில் பெரும் வீழ்ச்சி கண்டபோதும் குறைக்காத கேடுகெட்டத்தனத்தை தான் இந்த ஒன்றிய அரசு செய்தது ....


Velan Iyengaar
ஜன 15, 2025 12:25

றங்கிடுவிடம் அறிவார்ந்த பதிலை எதிர்பார்ப்பது நமது அறிவீனம் ... மாநில அரசின் வரி தான் விலை உயர்வுக்கு காரணம் அப்பட்டமான பொய்யை சொல்ல இவர்களுக்கு கூசவே கூசாதா ?? அடக்கவிலையிலேயே ஒன்றிய அரசின் மற்றும் ஒன்றிய அரசுக்கு இறுக்கமான தனியார் நிறுவங்கள் கொள்ளையோ லாபம் அடிப்பதை புட்டு புட்டு வைத்து பல காணொளிகள் உள்ளன.


Kumar Kumzi
ஜன 15, 2025 15:02

ஓசிகோட்டருக்காக திராவிட கொத்தடிமை கூமுட்ட என்னமா கூவுறா


raju
ஜன 15, 2025 09:24

இவெண்ணெல்லாம் ஒரு ஆடிட்டர்.. இன்றைக்கு ஆயில் விலை கூடி உள்ளது. இவுங்க குறைந்த விலைக்கு ஆயில் வாங்கினால் ஏன் ரூபாய் மதிப்பு பாதாளத்திற்கு சென்றுள்ளது. இவனை அரசியல்வாதி என்றும் சொல்லமுடியாது .நிச்சயம் ஆடிட்டர் என்று சொல்ல தகுதி இல்லை


Velan Iyengaar
ஜன 15, 2025 09:40

ஆடிட்டர் என்ற தொழிலும் உண்டு


Ramesh Trichy
ஜன 15, 2025 10:20

சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கம் சகஜம். அமெரிக்காவின் வயிற்று எரிச்சலினால் இந்த ஏற்றம்.


ஆரூர் ரங்
ஜன 15, 2025 11:00

குறைந்த விலை ரஷ்ய கச்சா எண்ணெய். NYRAA மட்டும் ரிலையன்ஸ் ஆலைகளில் மட்டும் சுத்திகரிக்கபட்டு பெட்ரோல் டீசல்


Kasimani Baskaran
ஜன 15, 2025 08:08

நேரு கண்ணாடியை போட்டிருப்பதால் மோடியின் அருமை பலருக்கு புரிய வாய்ப்பில்லை. நேரு கண்ணாடியை கழற்றி வைத்து அதன் பின்னர் நடந்தவற்றை அலசிப்பார்தால் மோடி டாப் என்பது புரியும். சீனா கோவிட் மூலம் உலக ஜனத்தொகையை குறைத்து தனது பொருளாதார ஆதிக்கத்தை நிலை நிறுத்த முனைந்த பொழுது இந்தியாவை காத்த காவல் தெய்வம் மோடி என்றால் அது மிகையாகாது. காங்கிரஸ் ஆட்சி அப்பொழுது இருந்திருந்தால் தடுப்பூசியை வைத்தே இந்தியாவை திவாலாக்கி இருப்பார்கள். அதன் பின்னர் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு 300 என்று ஆகியிருக்கும். ஜனத்தொகையில் 20% குறைத்து இருப்பார்கள்.


Karthi N
ஜன 15, 2025 07:08

ராகுல் காந்தி ஒட ரெட்டை குடியுரிமை விசயம் என்னாச்சு ?


அப்பாவி
ஜன 15, 2025 01:28

அப்பிடி ஒண்ணும் இல்லை. ஐரோப்பா ரஷிய பெட்ரோலை வாங்குவதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் ஐரோப்பிய களவாணிகள் அத்தியாவசியத் தேவைன்னுட்டு ரசிய பெட்ரோலை வாங்கினர். ஆனால் அந்த வருமானம் ரஷியாவுக்கு போதாமல் இருந்தது. அந்த நேரத்தில் குறைந்த விலைக்கு ஆயில் விக்க ரஷியா முன் வந்த போது இந்திய்யவும், சீனாவும் லோக்கல் கரன்சியில் வாங்க முன்வந்தன. முடிவு? ஐரோப்பிய களவாணிகளுடன் நாமும் சேர்ந்து கொண்டு ஆயில் வாங்கினோம். அது மட்டுமல்லாமல் ஆயிலை பெட்ரோலிய பொருளுக்கி ஐரோப்பாவுக்கே வித்தோம். உக்ரைனின் வீழ்ச்சிக்கு நாமும் ஒரு முக்கிய காரணம். பின்னாடி ரயில்ல போய் உக்ரைனுக்கு ஆதரவா பேசுற மாதிரி பேசுனோம். நாம்செய்தது அறமல்ல. பக்கா வியாபாரம்.


Tetra
ஜன 15, 2025 06:41

இக்கருத்து பப்புவின் வயிற்றெரிச்சல் ப்ரதிபலிப்பு. தேசத்திற்கு எதிரான கருத்து.


பேசும் தமிழன்
ஜன 15, 2025 07:55

உக்ரைன் நாடு எப்போதும் இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை தான் எடுத்து வந்து உள்ளது. காஷ்மீர் விவகாரம் முதல் இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக அணுகுண்டு வெடிப்பு முதல்.. அத்தனை விஷயங்களிலும்.. பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை தான் எடுத்து வந்து உள்ளது.. ரஷ்யா மட்டுமெ நமது நட்பு நாடு.... இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த ஆயுதங்கள் கொடுத்து ..... தமிழர்கள் இன அழிப்புக்கு உதவியாக இருந்தது... இதே உக்ரைன் நாடு தான்.


Ramesh Trichy
ஜன 15, 2025 10:14

இப்போ அமெரிக்காவும் அதைத்தான் செய்கிறது, பாதுகாப்பு காரணமுமின்னு ஐஐஸ்லாண்டியே அபகரிக்க முயற்சிக்கிறது.


GoK
ஜன 15, 2025 10:28

அப்பாவி இல்லை அடப்பாவி


முக்கிய வீடியோ