உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக்கில் கூடுதல் கவுன்டர்கள்! கடமை உணர்வை காய்ச்சி எடுத்த அன்புமணி

டாஸ்மாக்கில் கூடுதல் கவுன்டர்கள்! கடமை உணர்வை காய்ச்சி எடுத்த அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுக்கடைகளில் சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக் கூடாது என்று நினைத்து கூடுதல் கவுன்டர்களை திறக்கும் அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது என்று பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தமது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவின் விவரம் வருமாறு; தமிழ்நாட்டில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுன்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4,775 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3500க்கும் கூடுதலான கடைகளில், அதாவது கிட்டத்தட்ட 75% கடைகளில் தினமும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது என்பதே தமிழகத்தின் சீரழிவுக்கு எடுத்துக்காட்டு தான். இவற்றில் பல கடைகளில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று விற்பனைக் கவுன்டர்கள் இருந்தாலும் கூட மாலை நேரங்களிலும் தீப ஒளி போன்ற விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் கூடுதலான இன்னுமொரு கவுன்டரை திறக்க டாஸ்மாக் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகள் உள்ளன. வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்களின் நிலைமை குறித்து எந்த கவலையும் கொள்ளாத தமிழக அரசு, மதுக்கடைகளில் ஒரு சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக் கூடாது என்று நினைத்து கூடுதல் கவுன்டர்களை திறக்கிறது என்றால் அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. வருவாய் கொடுத்து வாழ வைக்கும் மது வாடிக்கையாளர்கள் நலனை அரசு எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதற்கு இதுவே சான்று.மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. ஏற்கனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

அப்பாவி
அக் 20, 2024 00:07

மரங்களை வெட்டி ரோட்டில் போட்டு பஸ், கார்களை ஓடாமல் நிறுத்திபெட்ரோலை சேமிச்சு பொல்யூஷனை காப்பாத்துன சுற்றுச் சூழல் அமைச்சர் பேசுறாரு.


Narayanan Sa
அக் 19, 2024 18:16

யார் என்ன சொன்னாலும் எதையும் கண்டு கொள்ள வேண்டாம். கருமமே கண்ணாய் இருக்க வேண்டும் என்பது தான் ஸ்டாலின் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூறிய அறிவுரை. காசை வாங்கி கல்லால போடு என்பதும். அதனால் இவர்கள் காதுகள் நம் பேச்சை கேட்டு திருந்தும் என்று நினைப்பது விழாலுக்கு இறைத்த நீர் போல. அதனால் மக்கள் சுதரித்து கொள்ள வேண்டும்


Venkatesh
அக் 19, 2024 17:10

ஊரைக்கொள்ளை அடித்து, அடாவடி பிச்சை எடுத்து, மானங்கெட்ட உங்களைப் போன்ற ஊ₹பிஸுக்கு 200 ரூபாய் பிச்சை போடும் அரசை உபி அரசுடன் ஓப்பிடுவதா?


Oru Indiyan
அக் 19, 2024 17:09

தீபாவளி டார்கெட்


மது ஒழிப்பு
அக் 19, 2024 16:34

இப்பதான் அண்ணன் குருமா மாநாடு போட்ட கையேடு இந்த புரட்சிகரமான நடவடிக்கை. எங்க அந்த மானஸ்தன்


வைகுண்டேஸ்வரன்
அக் 19, 2024 15:11

உத்திரபிரதேசத்தில் உங்க எஜமானரின் அசிஸ்டன்ட் யோகி, எல்லா மெட்ரோ ஸ்டேஷங்களிலும் மதுக்கடைகள் திறந்து வைத்திருக்கிறார். இப்போ அரசு டவுன் பஸ் டெர்மினஸ் வளாகத்தின் ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் களில் ஒரு கடை உ பி அரசின் மதுக்கடை இருக்க வேண்டும் என்றும் சரக்குலர் போட்டு கடைகள் திறந்துட்டார். அதெல்லாம் அன்புமணிக்கு தெரியல பாவம், கிணற்றுத் தவளையா இருக்கார். இ


raja
அக் 19, 2024 19:34

யோகிக்கு நாங்கள் ஓட்டு போடலையே... கேடுகெட்ட இந்த திருட்டு கூட்டத்துக்கு விடியல் வேண்டும் என்றல்லவா ஏமாந்து ஒட்டு போட்டு விட்டோம்...


வைகுண்டேஸ்வரன்
அக் 19, 2024 15:06

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஓட்டுக்கள், தேர்தல் இவற்றைப் பொறுத்தவரை டாஸ்மாக் ஒரு விஷயமே அல்ல. தமிழ் மக்களில் ஒரு 5% கூட டாஸ்மாக் மூடப்படும் என்பதால் ஒரு கட்சிக்கு ஓட்டு போட மாட்டான். அதே மாதிரி டாஸ்மாக் மூட மாட்டேன் என்பதாலேயே ஒரு கட்சிக்கு ஓட்டு போடாம இருக்கவும் மாட்டான். வேற ஏதாச்சும் பேசுங்க.


N Sasikumar Yadhav
அக் 19, 2024 14:13

திருட்டு திராவிட மாடல் எது செய்தாலும் ஈவே ராம்சாம் சொன்ன 21ம் பக்க 200 ரூபாய் ஊ...பிக்கள் முட்டு கொடுக்கிறார்கள்


சாண்டில்யன்
அக் 19, 2024 13:52

கவுன்ட்டர்களை அதிகப் படுத்துவது எப்படி வியாபாரத்தை பெருக்குவதாகும் வேலையாட்களின் வேலைப் பளுவை குறைப்பதுதான் நோக்கம் நிறைய பேருந்துகளை இயக்கினால் நிறையபேர் பயணிப்பதில்லை கூட்டம் குறையும் அவ்வளவே குளுகுளு அறையிலிருந்து அறிக்கை விட்டாலே மக்கள் பணியென்று நினைத்தால் பலன் பூஜ்யமே


raja
அக் 19, 2024 14:11

அட அட திராவிட கோவால் புற அறிவே...வியாபாரம் எப்போ பெருகும்... எடுத்து காட்டாய் பத்து பேர் வரும் இடத்தில் நூறு பேர் வந்தாலோ அல்லது ஒருவரே நூறு பாட்டில் வாங்குவதால் மொத்தத்தில் கூட்டம் அதிகம் வந்தால் தான் என்ற சிற்றறிவு கூட இல்லையே... எப்படியெல்லாம் இந்த துண்டு சீட்டுகளுக்கு புரிய வைக்க வேண்டி இருக்கு...


Kumar Kumzi
அக் 19, 2024 14:47

ஓசிகோட்டர் கொத்தடிமையின் அறிவு புல்லரிக்க வைக்கிறது


Duruvesan
அக் 19, 2024 15:32

மெய்யாலுமா?


rama adhavan
அக் 19, 2024 20:06

ஒரு பேச்சுக்கு விபசாரத்தைரெட் லைட் ஏரியா ஆதரித்தால் கூட எல்லோரும் போக மாட்டார்கள். எனவே அரசு ஆதரிக்கலாமா? பதில் சொல்லவும்.


Rangarajan Cv
அக் 19, 2024 13:35

Wish Dr. Anbumani’s voice is well heard in TN. Sensible in his statements. Hope turn around in the minds of TN people???


புதிய வீடியோ