உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க.,; அன்புமணி திட்டவட்டம்

ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க.,; அன்புமணி திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழகம், உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தை ஆளும் அரசில் பா.ம.க., பங்கேற்க வேண்டும்'' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.பா.ம.க.,வின் 37வது ஆண்டு விழாவை ஒட்டி அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம். ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம். பா.ம.க., இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பா.ம.க.விற்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழகத்தில் இல்லை. தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பா.ம.க., தமிழ் மொழி, இனம், தமிழக மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கபட வேண்டும் என்றால் பா.ம.க., வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தை ஆளும் அரசில் பா.ம.க., பங்கேற்க வேண்டும்.அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் ராமதாஸால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Vijay D Ratnam
ஜூலை 16, 2025 16:58

வாரிசு அரசியல், குடும்ப அரசியல், பரம்பரை அரசியல் இந்த தேசத்தை, தமிழ்நாட்டை பிடித்த தொழுநோய். இந்த நாத்தம் பிடித்த தொழுநோய் டெல்லியில் நேரு குடும்பத்தில் உருவானது. அந்த வைரஸ் தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பத்தில் தொற்ற, கருணாநிதி குடும்ப தொழுநோய் தொற்று நோயாக மாறி ராமதாஸ் குடும்பம், வைகோ குடும்பம், விஜயகாந்த் குடும்பம், மூப்பனார் குடும்பம், கிருஷ்ணசாமி குடும்பம் என்றாகி பல்கி பெருகிவிட்டது. இன்றைக்கு மாநிலம் தாண்டி மாவட்டம் வட்டம் சந்து பொந்து இண்டு இதுக்கெல்லாம் வாரிசு அரசியல், குடும்ப அரசியல்தான். தகுதியே இல்லாத தற்குறிகளும், தத்தி முண்டங்களும் சுலபமாக தலைமை பதவிக்கு வந்துவிடுகிறது. இந்த பச்சை அரசியல் அயோக்கியத்தனத்தை ஒழித்துக்கட்டவேண்டும். அது என்னவோ எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவில் பெரிதாக தொற்றவில்லை. வாரிசு அரசியல் பண்ண ஜெயக்குமார் முக்கி முக்கி பார்த்தார் முடியவில்லை. குடும்ப அரசியல் பண்ண சசிகலா குடும்பம் பண்ண முயற்சித்து இன்று அரசியல் அனாதையாகிவிட்டது. பரம்பரை அரசியலுக்கு அதிமுகவில் வாய்ப்பே இல்லை. வாக்களிக்கும் தமிழக மக்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எல்.ஏ, எம்.பி, வார்டு கவுன்சிலர் எதுவாக இருந்தாலும் அவ்ர் குடும்ப அரசியல் செய்தால் அவர்களை ஒட்டு போடாமல் புறக்கணிக்க வேண்டும், அது மஹாத்மா காந்தி பரம்பரையாக இருந்தாலும் சரி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பரம்பரையாக இருந்தாலும் சரி. செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா .


Naga Subramanian
ஜூலை 16, 2025 16:53

மொத்தத்தில் பாமக பாழ்.... கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி என்பது போல, உருவாக்கியவரே நல்-அடக்கமும் செய்து விட்டார்.


Santhakumar Srinivasalu
ஜூலை 16, 2025 13:05

அப்பன் மகன் சண்டையே தீரவில்லை. இதில் உலக நாடுகளை வளைக்கிறார்ராம்? ஏதாவது உளரினால் அரசியலில் நினைக்கலாம் என்கிற நிலைமை என்பது தான் உண்மை?


Biden
ஜூலை 16, 2025 12:43

சும்மா ஜாதியை புடிச்சு ....


சங்கி
ஜூலை 16, 2025 18:02

எவன் சாதியை வைத்து அரசியல் செய்யவில்லை? எல்லாருமே திருடனுங்க தான். சொல்லப்போனா கடைந்து எடுத்த அய்யோகியனுங்க.


Narayanan
ஜூலை 16, 2025 11:53

தமிழகத்தின் மண்வளம் சுரண்டி அடுத்த மாநிலங்களை வளமாக்குவது இதுநாள்வரை தெரியாதா ?


Narayanan
ஜூலை 16, 2025 11:49

கட்சி தொடங்கி 37 ஆண்டுகள் ஆன பின்பும் எதற்கு அடுத்த கட்சிக்காரனை முதல்வர் ஆக்கி அவனிடம் பதவிக்கு கையேந்தி இருக்கவேண்டும் . தனித்து நின்று நீங்களே ஆட்சி அமைக்கலாமே . அதற்கு முடியவில்லை என்றால் கட்சியை கலைத்து விட்டு ஆளும் கட்சியில் சேர்ந்துவிடலாம்


Jack
ஜூலை 16, 2025 11:22

நீங்க சொல்றத ராமு ஏத்துப்பாரா


saravan
ஜூலை 16, 2025 11:03

என்னது நாடுகளுடனான