உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க., அரசு வாங்கிய கடனில் ரூ.2.20 லட்சம் கோடி வீண் பா.ம.க., தலைவர் அன்புமணி ஆவேசம்

 தி.மு.க., அரசு வாங்கிய கடனில் ரூ.2.20 லட்சம் கோடி வீண் பா.ம.க., தலைவர் அன்புமணி ஆவேசம்

சென்னை: தி.மு.க., அரசு வாங்கிய கடனில், 2.20 லட்சம் கோடி ரூபாயை வீணாக செலவிட்டுள்ளதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: கடந்த நான்காண்டுகளில், தி.மு.க., அரசு வாங்கிய கடன், 3 லட்சத்து, 86,797 கோடி ரூபாய். அதில், 1 லட்சத்து 66,754 கோடி ரூபாயை மட்டுமே, மூலதன செலவு செய்துள்ளது. கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவே கடன் வாங்கியதாக, தி.மு.க., அரசு கட்டமைத்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. தி.மு.க., அரசு வாங்கிய கடனில், 43.11 சதவீதம் மட்டுமே, கட்டமைப்புகளை ஏற்படுத்த செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள, 2.20 லட்சம் கோடி ரூபாய் கடனை, தி.மு.க., அரசு வீணாக செலவிட்டுள்ளது. அரசு ஊழியர் சம்பளம், இலவச திட்டங்களுக்கு கூட, கடன் வாங்கியுள்ளது. கடந்த நான்காண்டுகளில், உத்தர பிரதேசத்தை விட, 50 சதவீதம் அதிகமான கடனை தமிழகம் வாங்கியுள்ளது. ஆனால், உபி., அரசு, 4.65 லட்சம் கோடி ரூபாயை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவிட்டுள்ளது. அதாவது, வாங்கிய கடனை விட, 2.08 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக செலவிட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில், உ.பி., அரசு, செலவுகளைக் கட்டுப்படுத்தி, 2.15 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி, வருவாய் உபரியை ஏற்படுத்தியதே இதற்கு காரணம். நிதி நிர்வாகம் குறித்து, உ.பி., அரசிடம் பாடம் கற்க வேண்டிய நிலையில் இருக்கும் தி.மு.க., அரசு, தமிழக வரிப்பணம், உ.பி.,க்கு செல்வதாக, அடிமுட்டாள்தனமான பொய்யை கூறி வருகிறது. கடனுக்காக, தி.மு.க., அரசு செலுத்திய வட்டி தொகையில், தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா 2 லட்சம் ரூபாய் வழங்க முடியும். ஆனால், ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும், 6 லட்சம் ரூபாயை தி.மு.க., அரசு கடன் வாங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Santhakumar Srinivasalu
ஜன 02, 2026 16:59

தினமும் செய்திகளில் இடம் பிடிக்க உதார் அடிச்சு விடரார்!


RAANA RAANA
ஜன 02, 2026 11:43

உத்தரபிரதேசத்தில் நடந்தது தான் இங்கும் நடக்கும். முலாயம்சிங் யாதவ் பின்னால் கட்சி செல்லவில்லை அவரது மகனின் பின்னால்தான் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றார்கள்.அப்படித்தான் இங்கும் நடக்கும்.


Mani . V
ஜன 02, 2026 06:52

நோ, நோ, வீண் எல்லாம் கிடையாது. அவ்வளவையும் ஆட்டையைப் போட்டு லண்டன், துபாய் உள்ளிட்ட இடங்களில் முதலீடு செய்து வைத்துள்ளோம்.


vaiko
ஜன 02, 2026 05:42

இப்போது தெரிகின்றது ஐயா ராமதாஸ் ஏன் அறிவு கெட்டவன் என்று சொன்னார் என்று.


Raj Kamal
ஜன 02, 2026 10:35

இப்போ ஆவேசமாகி என்னை செய்ய போறாரு. ஒற்றுமையே பலம், அப்பா சொல்வதை கேட்டு நடந்தால் உங்களுக்கும், கட்சிக்கும் நல்லது. தோற்றாலும், ஜெயித்தாலும் கட்சியம் மரியாதையும் உங்களிடம் இருக்கும்.


புதிய வீடியோ