உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி

படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: ''பா.ம.க., மாவட்ட செயலாளர்களுக்கு 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்தேன்'' என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், இன்று (மே 16) விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க., மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mszraw8f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டத்தில் 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். பா.ம.க, செயல் தலைவர் அன்புமணி கூட்டத்திற்கு வரவில்லை. இதற்கிடையே நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: 50 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினேன். அவர்களின் ஆலோசனையை கேட்டேன். களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை. பா.ம.க.வில் கோஷ்டி மோதல் இல்லை. கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான கூட்டம் நடந்தது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி நிச்சயம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

R.MURALIKRISHNAN
மே 16, 2025 21:11

எலக்சனுக்கு எலக்சன் கலக்சன் பாக்க அலயுற பாமக கட்சியத்தானே சொல்றீக.ஆமா இன்னுமா இந்த கட்சி இருக்கு.


N Srinivasan
மே 16, 2025 17:58

ஜெயித்து வந்தாலும் வேலை செய்யாமல் எப்படி காலத்தை படுத்துக்கொண்டே ஓட்டுவது என சொல்லிக்கொடுங்கள்


panneer selvam
மே 16, 2025 17:17

Just ignore this man wishes . He lives in isolation .The only activity is just read some news report in every day morning.


Rengaraj
மே 16, 2025 16:38

பிரச்சாரத்துக்கே போகாமல் படுத்துக்கொண்டே ஜெயிக்கும் அளவுக்கு இவர் மக்களின் ஏகோபித்த தலைவரா ? அது எப்படி சார் எல்லா அரசியல்வாதிகளும் தங்களை ரொம்ப ரொம்ப விவரமானவர்களாகவும் தங்களுக்கு வோட்டு போடும் மக்களை கேவலமாகவும் , அறிவில்லாத முட்டாள்களாகவும் , நினைக்க முடிகிறது. ?


Ramalingam Shanmugam
மே 16, 2025 15:59

படுத்து விடும் கட்சி நம்புங்க தாத்தா


Srinivasan Srisailam Chennai
மே 16, 2025 15:55

பெரியவர்கள் இளைஞர்களுக்கு வழி விடும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாத போட்டி மனப்பான்மையை ஏற்படுத்திக் கொண்டால் அவமானப்பட நேரிடுகிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள் ஆனால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.ஆலோசனை சொல்லுங்கள் அதிகாரத்தை காட்டாதீர்கள்.


angbu ganesh
மே 16, 2025 15:48

வயசாயிடுச்சு மாம்பழம் அழுகி போச்சு உங்க சீசனும் முடிஞ்சிடுச்சு


angbu ganesh
மே 16, 2025 15:47

ஜாதி வெறி பிடித்த உனக்கு வோட்டு போடறவன் பைத்தியகாரன்


SJ
மே 16, 2025 15:39

அவரு பெட்டி வாங்கறத சொல்றாருபா


TMM
மே 16, 2025 13:45

ஜாதிக்கட்சி நடத்திக்கொண்டு அடுத்தவன் தோள்மீது காலத்தை ஓட்டுபவனுக்கு வாயப்பாரு!!!படுத்துக்கொண்டே ஜெயிப்பாராம்.படுப்பார் ஆனால் எந்திருக்கமாட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை