உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., ராமதாஸ் வாழ்க்கை படமாகிறது

பா.ம.க., ராமதாஸ் வாழ்க்கை படமாகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பற்றிய வாழ்க்கை ‛அய்யா' என்ற பெயரில் படமாக தயாராகிறது. இப்படத்தை அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். சேரன் இயக்க, ராமதாஸ் கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார்.சில ஆண்டுகளாகவே ராமதாஸ் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் சேரன் ஈடுபட்டு இருந்தார். இதற்காக சிலமுறை ராமதாஸை சந்தித்து பேசினார். அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள், போராட்டங்களை தொகுத்து திரைக்கதையாக மாற்றினார். இந்நிலையில், ராமதாஸ் பிறந்தநாளான இன்று(ஜூலை 25) ‛அய்யா' படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் ராமதாஸ் ஆக சரத்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் முகம், வயது காரணமாகவும், அவரின் அரசியல் பின்புலம் காரணமாகவும் அந்த திட்டம் ரத்தானது. இப்போது ஆரி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.“ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'அய்யா'வில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பிற்காக இயக்குனர் சேரன் சார், மற்றும் தயாரிப்பாளர் தமிழ்க்குமரனுக்கு நன்றி. படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். குரலற்றவர்களுக்காக அவரது குரல் கர்ஜித்தது. இப்போது, அவரது கதையில் பெரிய திரையில் கர்ஜிக்க உள்ளது,” என்று ஆரி அர்ஜுனன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.இப்படம் தொடர்பாக 4 போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.1987ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக பதவி வகித்த போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றது. அதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த 1987 போராட்டத்தைக் குறிக்கும் வகையிலேயே அந்த நான்கு போஸ்டர்களும் வெளியாகியுள்ளதால் கதையும் அந்த போராட்டத்தை மையமாக வைத்தே இருக்கும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

மார்க்கம் மாராத இந்துடா
ஜூலை 25, 2025 20:06

படத்தின் ஒரு பகுதியில் சாலைகளின் ஓரங்களில் மரங்களை வெட்டுவதைச் சேர்க்கவும்


C.SRIRAM
ஜூலை 25, 2025 18:54

இந்த மருத்துவர் கொய்யா ஏதும் நாட்டுக்கும் சமூகத்துக்கும் செய்யவில்லை . தனது கும்ப சொத்தை மட்டுமே பெருக்கியிருக்கிறார் . ஒரு விதத்தில் பசுமை விரோதி


Ragupathy
ஜூலை 25, 2025 17:53

உண்மை வரலாறாக இருந்தால் மரங்களை வெட்டும் காட்சியும்...அடிக்கடி பெட்டி வாங்குகிற காட்சிகளும் நிறைய இருக்க வேண்டும்...


Santhakumar Srinivasalu
ஜூலை 25, 2025 20:01

ரொம்ப சரியா பதிவிட்டு இருக்குறீர்கள் தலைவரே!


பாரத புதல்வன்
ஜூலை 25, 2025 16:34

அய்யோ... னு வைங்கப்பா.... மக்கள் அய்யய்யோ... ன்னு ஓடிடுவாங்க... பெயர் பொருத்தமா இருக்கும்.


Madras Madra
ஜூலை 25, 2025 16:14

தமிழ் நாட்டுக்கு இது ஒண்ணுதான் குறைச்சல் போட்டி வாங்குனதெல்லாம் படத்தில் இடம் பெறுமா ?


suresh guptha
ஜூலை 25, 2025 16:08

don t spoil the future of the young generationby way cutting the trees if they see this movie


Rajasekar Jayaraman
ஜூலை 25, 2025 15:15

ஐயோ சுட்வீட் பாக்ஸ் வாங்கியது எல்லாம் வருமே அது அசிங்கமாச்சே.


Ramaswamy Jayaraman
ஜூலை 25, 2025 15:11

நாட்டில் நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது. அவைகளை விட்டுவிட்டு இவர்=rin படம் அவசியமா. என்ன சாதித்தார். மரங்களை வெட்டுவது காடுகளை அழிப்பதும் தமிழ்நாட்டில் மிக அதிகம். அதற்க்கு துணை நிற்பவர்களில் ஐவரும் ஒருவர்.


S Balakrishnan
ஜூலை 25, 2025 15:06

வைகோ அரசியல் அஸ்தமனத்தை மனதில் கொண்டு இவரும் தன் அஸ்தமனத்தை வெளிப்படுத்த இப்படி ஒரு படம் போலும். பெட்டி பெட்டியாக வாங்கியதை மகனுடன் பங்கு போட விரும்பாமல் இப்படி ஒரு முடிவு எடுத்து முடிவுரை செய்கிறார் போலும்.


Mani . V
ஜூலை 25, 2025 14:55

ஓ, காமெடி படமா?


suresh guptha
ஜூலை 25, 2025 16:09

not comedy bore pictufre


முக்கிய வீடியோ