உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குப்பையில் வீசுவதற்கா மாநிலக் கல்விக் கொள்கை; தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

குப்பையில் வீசுவதற்கா மாநிலக் கல்விக் கொள்கை; தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; குப்பையில் வீசுவதற்கா மாநிலக் கல்விக் கொள்கை, தாக்கல் செய்து ஓராண்டாகியும் தமிழக அரசு வெளியிடத் தயங்குவது ஏன் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின் கீழான கடைசி கல்வியாண்டு இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு உருவாக்கி 2020ம் ஆண்டில் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வி உள்ளிட்ட வரவேற்கப்பட வேண்டிய பல அம்சங்கள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது அது மாணவர்களின் இடை நிற்றலுக்கு வழி வகுக்கும் என்பதால் அதை பா.ம.க., ஏற்றுக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசு, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாறாக தமிழகத்தின் சூழலுக்கு பொருந்தும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று 2022ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது; அதே ஆண்டில் மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்காக நீதியரசர் டி.முருகேசன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.இந்த குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் நாள் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு நினைத்திருந்தால் உடனடியாக அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து மாநிலக் கல்விக் கொள்கையை இறுதி செய்து வெளியிட்டிருக்கலாம். ஆனால், தமிழக அரசு அதை செய்யவில்லை. அதற்கான காரணம் என்னவென்றும் புரியவில்லை.மாநிலக் கல்விக் கொள்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், அதன் மீது தமிழக அரசு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. தி.மு.க., அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ளது. அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படா விட்டால், அதனால் எந்த பயனும் இல்லை; அதை குப்பையில் தான் போட்டாக வேண்டும். இதற்காகவா மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாயை செலவு செய்து மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு தயாரித்தது?மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடாமல் இருக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. அப்படியிருந்தும் மாநிலக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தாமதிக்கிறது என்றால், தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கும். இப்போதும் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்தப்படுவதைப் பார்க்கும் போது இந்த ஐயம் உறுதியாகிறது.மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான விஷயத்தில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தான் தி.மு.க., அரசின் நிலைப்பாடு என்றால், ஓராண்டாகியும் வரைவு அறிக்கையை வெளியிடாதது ஏன்? மாநிலக் கல்விக் கொள்கை எப்போது முதல் நடைமுறைக்கு வரும்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு உடனடியாக விடையளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Sankara N
மே 28, 2025 11:39

நம் நாட்டில் எல்லாமே அரசியல் தான். பதிவீடுகளில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு பொய் தகவல்கள் பதியப்படுகின்றன. பல சகாப்தங்கள் சிறந்து விளங்கிய கல்வி கொள்கை திடீர் என காலாவதி ஆகி விட்டதா? இளைஞர்கள் தவறான வழியில் செல்வதற்கு அரசு மட்டும் தான் காரணமா? பெற்றோர்கள் அவர்களுடைய கடமையை சரிவர செய்கிறார்களா? மாணவர்களின் திறனையும் கல்வி தரத்தையும் உயர்த்த வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும். இது சாத்தியமா? மாணவர்கள் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும் என்பது அவர்கள் விரும்பும். இதை ஏன் திணிக்கிரீர்கள்.


Padmasridharan
மே 28, 2025 07:00

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை.. படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை, மதியம் உணவளித்து.. படித்த பின்னர் அவர்கள் தமிழ்நாடு மதுக்கடைகளில் நிற்பதா. . இதற்குதான் உணவும், கல்வியும் அவசியப்படுகிறதா.. நல்வழி நடத்த மாதா, பிதா, குரு மட்டும் இருந்தால் போதாது. . தெய்வதுக்கு இணையாக அரசியலும் தேவை. முன்பெல்லாம் படிக்காதவன்தான் criminals ஆக இருந்தார்கள். இப்பொழுதெல்லாம் படித்தவர்கள்தான் அதிகாரத்தை காண்பித்து criminals ஆகிறார்கள். மக்களை ஏமாற்றும் அரசு பிச்சைக்காரர்களாக


Pascal
மே 27, 2025 13:48

பாமக இறுதிவரை இப்படி ஒத்தூதிட்டே போக வேண்டியது தான்


srinivasan varadharajan
மே 27, 2025 08:46

ராமதாஸ் அவர்கள் கேள்வி நியாயமானது. சென்ற ஜூலை மாதம் பெறப்பட்ட அறிக்கையை வெளியிட வேண்டும். அது பற்றி விவாதிக்க வேண்டும்.


Yasararafath
மே 26, 2025 21:15

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மவுசு யோய்விட்டது.


ஆரூர் ரங்
மே 26, 2025 20:10

தேர்வே வைக்காமல் பாஸ் என்றால் கல்வித் தரம் என்னாகும்? நான்காண்டுகளாக முதல்வராக இருந்தும் கூட டெல்லியில் யாரோ எழுதி தயாரித்துத் தந்த கேள்வி பதில்களை வைத்து நிருபர் சந்திப்பு நடந்ததே. அது போல நிரந்தரமாக அடுத்தவர் தயவில் பிழைக்க வேண்டியிருக்கும்.


GMM
மே 26, 2025 19:51

தேசிய கல்வி கொள்கையின் முதல் நோக்கம் தாய்மொழி கல்வி. இதில் ஆதிக்கம் செலுத்தும் அந்நிய மொழிகள் வடிகட்டப்படும். ? படிப்பு வராத மாணவர்கள் இட நிற்றல் இருந்தாலும், அவருக்குள் ஒரு திறமை மறைந்து இருக்கும். கண்ணதாசன் படிப்பு பள்ளி கல்வி. பாடல் இயற்றும் திறமை பல்கலைக்கு இணை. மாவட்ட, மாநில கல்வி கொள்கை தேசிய, சர்வதேச வேலைவாய்ப்பு தராது. குப்பையில் வீச கூட தகுதி இருக்காது?


Kalyanaraman
மே 26, 2025 19:24

தலைவரே ஒவ்வொரு தேர்தலுக்கும் உங்களுக்கு தேவை பெட்டி. அது கிடைச்சிரும் கவலைப்படாதீங்க. வயதான காலத்தில் தைல மசாஜ் செய்து தைலாபுரத்தில் ரிலாக்ஸா இருங்க.


Kothandaraman Ramanujam IITM
மே 26, 2025 19:21

கல்வி என்றல் கிலோ எண்ணவிலை என்று கேட்கும் குடும்பத்திடம் இதெல்லாம் கேக்கலாமா சார்


அப்பாவி
மே 26, 2025 19:00

மும்மொழிக்.கொள்கையை ஏற்கமாட்டோம்னு அரசு அறிவித்தால் வாயை மூடிக்கிட்டு இருப்பீங்க.