உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை மாணவி வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு!

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கில் கைதான, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனிடமும், அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த போலீசாரிடமும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிறையில் உள்ள ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவரை நேற்று அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணையை கடுமையாக்கினர். அப்போது, தன்னுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த, கோட்டூர்புரம் மற்றும் அபிராமபுரம் போலீசார் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், அபிராமபுரம் காவல் நிலைய எழுத்தர் குறித்தும் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவினர், ஞானசேகரனின் கூட்டாளிகளாக செயல்பட்ட போலீசாரிடமும் விசாரணையை துவக்கி உள்ளனர். ஞானசேகரன், போலீஸ் சீருடை மற்றும் வாக்கி டாக்கி சகிதமாக, அண்ணா பல்கலை வளாகத்தில் சுற்றிய தகவல், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரிய வந்துள்ளது.அந்த சீருடை யாருடையது என, போலீசார் மற்றும் ஞானசேகரனிடமும் விசாரணை நடக்கிறது. சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ள ஆவடி துணை கமிஷனர் அய்மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோரும் தனித்தனியே, ஞானசேகரனிடம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

MP.K
ஜன 23, 2025 13:50

கூட்டணி


பல்லவி
ஜன 22, 2025 18:39

கனியாமுத்தூர் பள்ளியில்நடந்த மரணங்கள் , தகப்பனார் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு, வயர் கடித்த வழக்கு, இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை இருந்ததாலும் இந்த வழக்கும் விசாரணை நியாயமாக நடக்குமா என்பது தெரியவில்லை


சிந்தனை
ஜன 22, 2025 14:09

குற்றம் செய்யும் காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தூக்கு தண்டனைதான் நாடு உருப்பட வழி...


Rengaraj
ஜன 22, 2025 13:52

சினிமாவில் பிரச்சினைக்குரியவங்க லாரி விபத்தில் செத்து போவாங்க, அல்லது விசாரணையில் செத்துபோவாங்க, அல்லது கோர்ட்டுக்கு போகும்வழியில் எப்படியாவது செத்துபோவாங்க, கேசு முடிஞ்சிடும், விவகாரம் போகிற போக்கை பார்த்தால் இதெல்லாம் இப்போ நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதுவும் நடக்கலாம். இந்த நவீன கால அரசியல்ல அப்படி நடந்தாலும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு நாமளும் எடுத்துக்கணும் ஏழைகளுக்கும் அப்பாவிகளுக்கும் மட்டும்தான் சட்டம் தன்னுடைய கடமையை செய்யலாமா வேணாமா அப்படின்னு நிறைய டைம் எடுத்து யோசிக்கும். இந்த மாதிரி கிரிமினலுகளுக்கு சட்டம் என்னைக்குமே பாதுக்காப்பாக இருக்கும். கேரளாவில் புருஷனுக்கு விஷம் வச்ச பொண்ணுக்கு தூக்கு தண்டனை பாலியல் பள்ளியில் கொடுமை பண்ணி கொலை பண்ணினவனுக்கு ஆயுள்தண்டனை கேட்டால் சட்டத்தின் பார்வை என்று சொல்ல்கிறார்கள். சட்டம் ஒவ்வொரு குற்றத்துக்கும் வெவ்வேறு கண்ணாடியை அணிந்துகொள்கிறதா, என்ற சந்தேகம் படிக்காத ஏழை பாமரனுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியவில்லையே பணம் அப்புறம் தான், ரவுடிகள் இருந்தால் யாரையும் எப்பவும் பயம்காட்டி விலைக்கு வாங்கலாம் என்ற அச்சமற்ற தன்மைக்கு யார் காரணம் என்பதை பாமரக்கு வெளிச்சம் போட்டு காட்டவும் வேண்டுமோ ?


ராமகிருஷ்ணன்
ஜன 22, 2025 13:50

யார் அந்த சார் என்பது தெரிந்தால் இந்த விபரங்கள் வெளியாகும் என்று தலமை அலறுகிறது. எதிர்கட்சிகள் ரொம்ப அசிங்கம் என்று அடக்கி வாசிக்கிறார்கள்


sankaranarayanan
ஜன 22, 2025 13:40

எதோ அந்த சார் சார் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று ஊடகங்களில் வந்த செய்தி என்ன ஆச்சு அந்த சார் யார் யார் என்று இன்னுமா வெளிவரவில்லை இல்லை அதை அப்படியே அமுக்கி விட்டார்களா


jayvee
ஜன 22, 2025 13:32

இப்படிப்பட்ட நபரை சகோதரர் என்று குறிப்பிட்டு அழைத்த சபாநாயகரை முதல்வர் பதவி நீக்கம் செய்யவேண்டும்..


Natarajan Ramanathan
ஜன 22, 2025 13:05

அவன் அணிந்திருந்த சீருடை போலீஸ் கமிஷனர் அல்லது "அந்த சார்" கொடுத்ததாககூட இருக்கலாம்.


Ramesh Sargam
ஜன 22, 2025 12:54

யார் அந்த சார்? என்பதற்கே ஒரு பதிலும் தெரியவில்லை. அதற்குள் யார் அந்த போலீசார்? என்று மீண்டும் ஒரு கேள்வியா?


அப்பாவி
ஜன 22, 2025 11:46

சீக்கிரமே பாயாசம் போட்டுருவாங்க. இன்னிக்கி வலிப்பு வந்துச்சாம்.


புதிய வீடியோ