உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகள் பேச்சுக்கு அழைப்பதாக கூறி ஆசிரியர்களை ஏமாற்றி கைது செய்த போலீசார்

அதிகாரிகள் பேச்சுக்கு அழைப்பதாக கூறி ஆசிரியர்களை ஏமாற்றி கைது செய்த போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆறாம் நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை, 'அரசு அதிகாரிகள் பேச அழைத்துள்ளனர்' எனக் கூறி, அழைத்து சென்று, காத்திருக்க வைத்து, பின்னர் கைது செய்தது, ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், சென்னையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை டி.பி.ஐ. வளாகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எழிலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில், கடந்த ஐந்து நாட்களாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

நுழைவு வாயில்

ஆறாம் நாளாக இன்று(டிச.,31), இடைநிலை ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளுடன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டி.பி.ஐ., வளாக நுழைவு வாயிலில் அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் மாநிலச் செயலர் அமுதா, சி.பி.எஸ்., மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

நேரம் இல்லை

போராட்டத்தில் ஈடுபட்ட, ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்த போலீசார், அரசின் சார்பில் பேச்சுக்கு அழைத்திருப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, போராட்ட களத்தில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலர் ராபர்ட் பேசுகையில், 'முதல்வரின் முதன்மை செயலர் அனுஜார்ஜ், பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோர் பேச அழைத்து உள்ளனர். 'பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அரசாணை வெளியீடும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.அதன்பின், போலீசாரின் வாகனத்தில், ஐந்து மாநில நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். ஆனால், போலீசார் தலைமைச் செயலகம் அழைத்து செல்லாமல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, நிர்வாகிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின், பேச்சு நடத்த, அதிகாரிகளுக்கு போதிய நேரம் இல்லை என தெரிவித்தனர்.

திருமண மண்டபம்

அதன்பின், மீண்டும் டி.பி.ஐ., வளாகம் திரும்பிய ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, அவர்களைப் போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்தனர்.இது குறித்து, சங்கத்தின் பொதுச் செயலர் ராபர்ட் கூறுகையில், ''இடைநிலை ஆசிரியர்கள் ஆறு நாட்களாக போராடி வருகிறோம். ''ஆனால், இன்றளவும் எங்களை பேச்சுக்கு அழைக்க, அதிகாரிகளுக்கு நேரம் இல்லை. அரசும், அதிகாரிகளும், எங்கள் கோரிக்கைகளை அலட்சிய போக்குடன் செயல்படுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

vns
ஜன 01, 2026 20:23

போராட்டம் செய்யும் அத்தனைபேரையும் சிறையில் தள்ளுங்கள். ஆசிரியராக வேலை செய்யத் தகுதி இல்லை. பாடம் கற்பிக்கும் முறை தெரியாது, தன்னைத்தானே தகுதி மேம்பாடு செய்துகொள்ள முடியாது. இவர்களுக்கு ரூ 10,000 மாத சம்பளமாகக் கொடுப்பதே அதிகம்.


வசந்த ராஜா தூத்துக்குடி
ஜன 01, 2026 14:31

மக்கள் திரும்பவும் திரும்பவும் திமுகவுக்கு ஓட்டு போடுவதால் மக்களின் எந்த போராட்டத்தையும் B J P கண்டு கொள்வதில்லை ஆதரிப்பதும் இல்லை


Kasimani Baskaran
ஜன 01, 2026 09:35

ஆசிரியர்கள் நாட்டின் வருங்காலம். அவர்களுக்கு கொடுப்பதால் நாட்டு வளம் குறைந்து விடாது - அதே சமயம் அவர்களுக்கு சர்வதேச அளவில் போதிய பயிற்சி கொடுத்து தரமான கல்வியை அனைவருக்கும் கொடுக்க வகை செய்வதும் முக்கியம். 50 ஆண்டு திராவிட ஆட்சியில் அரசு பள்ளிகளின் நிலை மகா மோசம். கல்வியை கார்பொரேட் தொழிலாக ஆக்கி நாசம் செய்து விட்டார்கள். பணத்துக்கு ஓட்டுப்போட மட்டும் ஏழைகள் வாழ்கிறார்கள் என்ற நிலை பரிதாபமானது


Ganapathi Amir
ஜன 01, 2026 10:16

உண்மை


visu
ஜன 01, 2026 08:28

சம ஊதியம் என்றால் 2009 கு முன் சேர்ந்தவர்களின் ஊதியத்தை குறைக்க சொல்லி போராடுங்கள் அதை விட்டு அரசு ஊழியர் ஊதியம் அரசின் வருமானத்தில் 70% என்று இருந்தால் அரசுக்காக மக்கள் வரி செலுத்தும் நிலை தான் நீடிக்கும் இதை தவிர்க்கத்தான் 2009 பின் புதிதாக சேர்வோரின் ஊதியத்தை குறைத்து நிர்ணயித்தனர் ஏற்று கொண்டு சேர்ந்தவர்கள்தானே இவர்கள்


Ganapathi Amir
ஜன 01, 2026 10:10

பழைய சோறுபோட்டு வேலை வாங்கிய நினைப்பா உனக்கு..? இங்கே சட்டத்தின் ஆட்சிதானே நடக்கிறது..? உழைப்புறிஞ்சிகளின் பேச்சு இப்படித்தான் இருக்கும்.. அவங்க உரிமையை அவங்க கேக்குறாங்க.. உனக்கு ஏன் எரியுது..?


Rajarajan
ஜன 01, 2026 05:53

சரியான நடவடிக்கை. அதீத அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்களே தங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், தங்கள் வாரிசுகளை குறைந்த சம்பளம் பெறும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும்போது, அரசு பள்ளிகளை ஏன் ஒரு தேர்ந்தெடுத்த தனியார் குழுவிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க கூடாது ?? திரைப்பட நடிகர் விசு பாணியில் படிக்கவும். இதில் அரசு சம்பளம் பெறும் ஊழியர் அனைவரும் அடங்குவர்.


Ganapathi Amir
ஜன 01, 2026 10:12

ஏன்.. அரசு வேலைக்கு போக முடியலையா..? பழைய சோத்துக்கு வேலை வாங்குவமா..?


Priyan Vadanad
ஜன 01, 2026 00:46

இந்த ஆ சிறியர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் அரசையும் மக்களையும் மிரட்டி ஏமாற்றி பணம் பிடுங்கும்போது இவர்களை ஏமாற்றி கைது செய்வதில் தவறில்ல்லை.


Kasimani Baskaran
ஜன 01, 2026 09:32

ஆ பெரியவர் தேர்தலுக்கு முன் பொய் சொல்லலாமா?


Ganapathi Amir
ஜன 01, 2026 10:14

நீ ரொம்ப பெரியவன்.. என்ன விஷயம்னே தெரியாம ஏமாத்துறது சரினு பேச வந்துட்ட.. உன்னையெல்லாம் எதக்கொண்டு அடிச்சாலும் தப்பில்லடா தப்பிலி..


Murugesan
ஜன 01, 2026 00:05

காவாளிகளின்துறை போலிஸ் பொருக்கிகள்


முத்துக்குமார் மதுரை
டிச 31, 2025 23:26

இவங்க எல்லோரும் கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்டவங்க வரக்கூடிய 2026 தேர்தலிலும் இவங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க அதனால் இவங்க போராட்டத்தை B J P கண்டுக்காமல் இருக்காங்க இவங்களுக்கு B J P ஆதரவு கொடுக்க மாட்டாங்க இன்னமும் இவிங்க திமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க B J P இவிங்க போராட்டத்தை கண்டுக்காமல் தான் இருப்பாங்க


Ganapathi Amir
ஜன 01, 2026 10:15

இந்த முறை கண்டிப்பாக திமுகவுக்கு போடமாட்டாங்க..பிஜேபி ஆட்சிக்கு வர்ற அளவுக்கு வாக்குறுதிகள் இருக்கனும்..


R. SUKUMAR CHEZHIAN
டிச 31, 2025 23:12

திராவிட மாடலின் இன்னொரு உதாரணம். தமிழக மக்கள் தான் திருந்த வேண்டும். திராவிட கும்பல்கள் இப்படி தான் நடந்தது கொள்ளும். அகில பாரத அளவில் காங்கிரசும் தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஒழிந்தால் தான் தமிழகம் உருப்படும் பாரத நாடு வல்லரசாக மாரும்.


உண்மை கசக்கும்
டிச 31, 2025 22:36

இந்த ஆசிரியர்கள் மீண்டும் மீண்டும் திருடர் கட்சிகளுக்கே வாக்கு அளிப்பார்கள்