உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் குறித்து அவதுாறு விஜய் மீது போலீசில் புகார்

முதல்வர் குறித்து அவதுாறு விஜய் மீது போலீசில் புகார்

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த, தி.மு.க., ஐ.டி., அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முரளி கிருஷ்ணன், திருச்சி சைபர் க்ரைம் போலீசில் அளித்த புகார்: த.வெ.க., தலைவர் விஜய், கடந்த, 20ம் தேதி, நாகை, திருவாரூரில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதுாறாகவும், ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார். இது குறித்து, மணப்பாறை போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் புகாரை ஏற்கவில்லை. எனவே, சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கின்றேன். உரிய விசாரணை நடத்தி, விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raju Ramasamy
செப் 27, 2025 13:22

ஏண்டா இன்று எம் தமிழகம் அமைதி பூங்காவா இருக்குதா .......ரோடு சரியில்ல ....கஞ்சா புழக்கம் ...பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல .....மனசாட்சிப்படி உங்க வீட்ல கேட்டுட்டு பதில் போடுங்க தமிழா


Vasan
செப் 27, 2025 09:00

விஜய் கட்சியை முடக்குங்கள். அவரையும் வீட்டில் அடையுங்கள், மே 2026 வரை. தேவையில்லாமல் அமைதி பூங்கா தமிழத்தில் கிளர்ச்சியை கிளப்புகிறார். உலகே நாடக மேடையாய் இருந்தாலும், தமிழகம் இனி என்றும் திரை மேடையாய் இருக்காது.