உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து கடவுள் அவமதிப்பு; சத்யராஜ் மீது போலீசில் புகார்

ஹிந்து கடவுள் அவமதிப்பு; சத்யராஜ் மீது போலீசில் புகார்

சென்னை:'ஹிந்து கடவுள்கள் என்பது கற்பனை, மிகைப்படுத்தப்பட்ட மாயை' என, தொடர்ந்து ஹிந்து மதத்தை அவமதித்து வரும், நடிகர் சத்யராஜ் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்தவர் சதீஷ். பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட அமைப்பாளர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த மாதம், 24ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். அவர் பேசும் போது, 'ஹிந்து கடவுள்கள் கற்பனை, மிகைப்படுத்தப்பட்ட மாயை' என்றெல்லாம் குறிப்பிட்டு உள்ளார். மேலும், நம் நாட்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் மீது, தற்கொலை படை தாக்குதல் நடத்திய, விடுதலை புலிகள் அமைப்பினரை புகழ்ந்து பேசி உள்ளார். புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் படத்தை திறந்து வைத்தது பெருமையாக இருப்பதாகவும், அந்த வாய்ப்பை வி.சி., தலைவர் திருமாவளவன் ஏற்படுத்தி கொடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். நடிகர் சத்யராஜ் தொடர்ந்து ஹிந்து கடவுள்களை அவமதித்து வருகிறார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Iyer
ஜூலை 17, 2025 04:07

தினமும் சூர்யநமஸ்கரம் செய்தல், கோவிலுக்கு செல்வது மற்றும் யோகா பிராணாயாமம் பயிற்சி செய்தால்தான் ஹிந்து மதத்தின் அருமை தெரியும்.


J. Vensuslaus
ஜூலை 17, 2025 00:27

இந்தியா உட்பட உலகிலுள்ள எல்லா மத கடவுள்களும் வெறும் கற்பனையே. கடவுள் இருக்கிறார் என்பதற்கு துரும்பளவு கூட ஆதாரம் இல்லை. கடவுள் இல்லை என்ற உண்மையை சொல்வோர் எந்த மத கடவுளும் கிடையாது என்று தீர்க்கமாக சொல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் கடவுள் இல்லை என்று சொல்வது மற்ற மதங்களுக்கெல்லாம் கடவுள் இருக்கிறார் என்றாகிவிடும். மொத்தத்தில், கடுவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்ற உண்மையை எல்லோரும் உணர வேண்டும். நம்பிக்கையே கடவுள் என்பர் சிலர். நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை கடவுள் அல்ல. இந்தியாவில், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சார்லஸ் டார்வின், ஈவேரா பெரியார் போன்ற தலைசிறந்த தத்துவ ஞானிகளின் எழுத்துக்களை கட்டாய படங்களாக வைக்க வேண்டும். கட்டுக்கதைகளை நீக்க வேண்டும். இது நடந்தால் மூட நம்பிக்கைகள், துவேஷங்கள் ஒழியும், கற்பனை உலகிலிருந்து நிஜ உலகிற்கும் மக்கள் வருவர். நாடு உருப்படும். நாம் உருப்படுவோம்.


Narayanan
ஜூலை 16, 2025 11:57

போலீசும்,நீதித்துறையும் ஆளும் கட்சிகளின் துணையுடன் இருப்பதால் ஒரு பயனும் இல்லை .


N Annamalai
ஜூலை 14, 2025 16:00

அடுத்த படம் ரிலீஸ் ஆகும் பொது இதை ஆரம்பிக்கலாம் .அப்போது மன்னிப்பு கேட்பார் என்று நினைக்கிறேன் .


sasidharan
ஜூலை 14, 2025 15:13

ஹிந்துக்கள்தான் யார் என்ன சொன்னாலும் மறுப்பு சொல்வதில்லேயே. இனியும் விழித்து கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய மடத்தனம் வேறு ஒன்றும் இல்லை


Matt P
ஜூலை 14, 2025 11:59

கடவுளை நம்புவதும் நம்பாமலிருப்பதும் அவரது சொந்த விஷயம். முன்னுக்கு பின் முரணாக பேசுபவர். பேச்சுக்களில் தரமும் திறனும் இல்லை.


Anand
ஜூலை 14, 2025 11:24

இருபத்தி ஒண்ணாம் பக்க பேர்வழி, அப்படிதான் நடந்துக்கொள்வான்..


sankaranarayanan
ஜூலை 12, 2025 18:29

புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் படத்தை திறந்து வைத்தது பெருமையாக இருப்பதாகவும், அந்த வாய்ப்பை வி.சி., தலைவர் திருமாவளவன் ஏற்படுத்தி கொடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். நடிகர் சத்யராஜ் இவர் மீது இன்னும் மத்திய எந்த அரசு நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிறது உச்ச நீதி மன்றமே இவர் மீது இவர் பேசிய பேச்சுக்கு நடவடிக்கைகள் எடுக்கலாமே. மத வாதத்தை கிளப்பிவிடும் அசத்தியராஜனை உச்ச நீதி மன்றம் வெளில் விட்டு வை்ததிருப்பது நாட்டுக்கே நல்லதல்ல


Chandhra Mouleeswaran MK
ஜூலை 11, 2025 17:27

"என்னோட கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்கரீங்களேப்பா" குல்லா பாயையும் பாவாட சாமியயும் இப்பிடிக் கிண்டலடிச்சா அப்பரமேட்டிக்கி எனக்கு மாமூல் எல்லாம், என்னாம்மா கண்ணு நீங்க தருவீங்களா? நீங்களும் அப்பப்பக் குடுத்துப் பாருங்க அப்பரமா இந்த அனுஷம் தியேட்டரு சத்திய ராசு ஆருன்னு காட்டரன்"


Kalyan Singapore
ஜூலை 10, 2025 20:50

எந்த கடவுளாவது இருந்திருந்தால் காசா வில் ஒரு மதத்தைச்சேர்ந்தவர்கள் இந்த அடி வாங்கியிருப்பார்களா ?


புதிய வீடியோ