உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலத்தில் ராமநவமி ரத யாத்திரை நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் தகவல்

சேலத்தில் ராமநவமி ரத யாத்திரை நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் தகவல்

சென்னை : ராமநவமி தினத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், ராம ரத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஹிந்து மக்கள் கட்சியின், சேலம் மாவட்ட தலைவர் டி.பெரியசாமி தாக்கல் செய்த மனு:

ராம நவமி பண்டிகை, வரும், 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் இருந்து ராம ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சிறப்பு பூஜைகளுடன் அயோத்தியாபட்டினத்தில் ரத யாத்திரை துவங்கி, செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவிலில் நிறைவு பெறுகிறது.இதற்கு அனுமதி கோரி, தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு, மார்ச், 10ல் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. அமைதியான முறையில் நடக்கும் ரத யாத்திரைக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து, உரிய ஆணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், 'சேலம் அம்மாப்பேட்டை உதவி கமிஷனர், மார்ச் 31ம் தேதி, இந்த ராம ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்' என்று, தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, காவல் துறை அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

'அரசியல் சாசனத்திற்கு எதிரானது'

பேச்சுரிமை என்பது, இந்திய அரசியல் சாசனத்தில், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. அரசுக்கு எதிரான கருத்துகளை கூட, அறவழியில் வெளிப்படுத்தும் உரிமை, எல்லா குடிமகனுக்கும் உள்ளது. தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் முகமாகவே, ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், பேரணி போன்றவை நடக்கின்றன. இவற்றுக்கு அனுமதி வழங்குவது என்பது, மக்களாட்சி கூறுகளில் அடிப்படையாக இருக்கிறது. இந்த நிகழ்வுகளை யார் நடத்தினாலும், இவற்றை முறைப்படுத்தலாமே தவிர, முற்றிலுமாக தடை செய்வது, அனுமதி மறுப்பது அல்லது கட்டணம் செலுத்த கூறுவது போன்றவை, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள், பல்வேறு வழக்குகளில், அறவழி போராட்டங்களை ஆதரித்துள்ளன.எல்லா குடிமகனுக்கும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. இதை மறுப்பதே, அதற்கு எதிரானது. அறிவியல் பூர்வமற்றதாக, ஏற்றுக் கொள்ளக்கூடாததாக இருந்தாலும் கூட, அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.- வழக்கறிஞர் க.சக்திவேல்,சென்னை உயர் நீதிமன்றம்.

கோர்ட்டுக்கு சென்றால் தான் அனுமதி

ஹிந்து பேரணிகளுக்கு பாரபட்சம் வள்ளலாளர் சமரச சுத்த சன்மார்க்க சபை நிர்வாகத்தில் இருந்து, ஹிந்து அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தி பொதுக்கூட்டம்; சேலத்தில் ராம ரத யாத்திரை; விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சென்னையில் நங்கநல்லுாரில் பொதுக்கூட்டம்; கோவை சங்கமேஸ்வரர் கோவில் தைப்பூசம், சித்திரை திருவிழா மற்றும் தேரோட்டம்; திருப்பரங்குன்றம் மலையை காக்க கோரி வேல் வழிபாடு ஆகியவை நடத்த அனுமதி கோரி, அந்தந்த மாவட்ட காவல் துறையிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.இவற்றுக்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்தது. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஒரு மாதமாக போராட்டம், பொதுக்கூட்டம், யாத்திரை, பேரணி ஆகியவற்றுக்கு போலீசார் அனுமதி மறுத்ததை எதிர்த்து, வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு சிலவற்றுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

B MAADHAVAN
ஏப் 02, 2025 16:27

கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடத்த, சாலையில் நடுவில் தொழுகை நடத்த அனுமதி கொடுக்கும் தமிழக அரசு, ஹிந்து மக்கள் கட்சியின், சேலம் மாவட்ட தலைவர் டி.பெரியசாமி நடத்தும் ராம நவமி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி தராது. ஒருவேளை, தலைவர் டி பெரியசாமி என்பதற்கு பதில் ஈ வே ராமசாமி என்று பெயர் வைத்தால் கொடுப்பார்களோ என்னவோ..


M S RAGHUNATHAN
ஏப் 02, 2025 14:57

நடு சாலையில் இஸ்லாமியர்கள் மத பிரார்த்தனை செய்யலாம். போக்குவரத்து பாதிக்கப் பட்டால் கவலை இல்லை. இதை நீதிமன்றம் கண்டு கொள்ளாது.


Anand
ஏப் 02, 2025 11:40

கோயமுத்தூரில் மூர்க்க தீவிரவாதி சவ ஊர்வலத்திற்கு அனுமதி, ஆனால் இதற்கு அனுமதி மறுப்பு... என்னடா நடக்குது டாஸ்மாக் டூமில்ஸ் நாட்டில்? கேடுகெட்ட ஆட்சி..


M S RAGHUNATHAN
ஏப் 02, 2025 10:56

நம் நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தர அல்ல ஐந்தாம் தர குடிமக்கள். ஸ்டாலின் சர்வாதிகார ஆட்சிக்கு அடிமைகள். இவர்கள் ஊர்வலம், பேரணி, போராட்டம் ஆகியவை நடத்த தகுதி அற்றவர்கள் என்பது தமிழக காவல் துறையின் விதி.


ஆரூர் ரங்
ஏப் 02, 2025 09:31

மீலாடி நபிக்கு ஊர்வலம் பொதுகூட்டம் அனுமதியின்றி நடத்தலாம். அமைச்சர்களும் கலந்து கொள்வரே.(அரபு நாடுகளில் கூட மிலாதுநபி க்கு விடுமுறை கிடையாது.) கோர்ட் தடுக்காது. ஏனெனில் சட்டத்தின் முன் அவர்கள் ஸ்பெஷல் சிறுபான்மை. ஆக நீதித்துறையை சீர்திருத்தம் செய்தால்தான் நல்ல முடிவு ஏற்படும்.


VARUN
ஏப் 02, 2025 14:15

உண்மையான பேரை வைத்து பதிவு போடுங்க


sankaranarayanan
ஏப் 02, 2025 08:44

இதே வக்போர்டு ஊர்வலம் என்றால் திராவிட மாடல் அரசு அனுமதி அளித்திருக்கும் அந்த ஊர்வலத்தில் பங்கேற்கும் இதுதானையா திராவிட மாடல் அரசின் தனி சிறப்பு மைனாரிட்டியை வாழவைக்கும் மெஜாரிட்டியாய் சாகவைக்கும்


S.V.Srinivasan
ஏப் 02, 2025 08:35

இதுதான்யா அக்மார்க் ப்ராண்ட் சர்வாதிகார ஆட்சி.


visu
ஏப் 02, 2025 08:32

ரமலான் ஊரவலம் என்றால் அனுமதி. அரசியல் கட்சி ஊர்வலங்களை அனுமதி. மத்திய அமைச்சர் கொடும்பாவி எரிப்பு என்றால் அனுமதி இல்லாமல் போராட்டம் பேருக்கு ஒரு வழக்கு அதன் பின் எந்த நடவடிக்கை கிடையாது அதே ஹிந்து என்றால் நடு இரவில் கைது சிறை என்ன ஆட்சி இது


Oru Indiyan
ஏப் 02, 2025 08:13

இந்த இலந்திரை ஒரு மார்க்கம்


N.Purushothaman
ஏப் 02, 2025 07:48

மானங்கெட்ட ஆட்சி ...அதுக்கு தி .மு. க வே சாட்சி ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை