உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடிக்கு உள்நோக்கம் இல்லை: விளக்கம் சொல்கிறது போலீஸ்

பொன்முடிக்கு உள்நோக்கம் இல்லை: விளக்கம் சொல்கிறது போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆபாச பேச்சு வழக்கை, சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் முடித்து வைத்துள்ளனர். சென்னையில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய பொன்முடி, சைவ, வைணவ சமயங்களின் புனிதச் சின்னங்களை, விலைமாதர்களோடு ஒப்பிட்டு பேசியிருந்தார். பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பொன்முடி மீது தமிழகம் முழுதும், பல்வேறு கா வல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப் பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புகார் தெரிவித்த பாரத் ஹிந்து முன்னணியின் சென்னை மாவட்ட அமைப்பாளர் சதீஷுக்கு, சென்னை வேப்பேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அனுப்பியுள்ள பதில்: பொன்முடியின் பேச் சை கவனமுடன் பரிசீலித்ததில், மதம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பே சவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த பட்டி மன்றத்தில், விவாதம் செய்யப்பட்ட ஒரு கருத்தையே, மீண்டும் நினைவு படுத்தி பேசியுள்ளார். பொன்முடியின் பேச்சை முழுமையாக கேட்காமல், சமூக வலைத ளங்களில் வெட்டி, ஒட்டி பரப்பப்பட்ட பேச்சை மட்டும் பார்த்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தி னரின் மனம் புண்படுவதாக குறிப்பிட்டுள்ளது தெரிய வருகிறது. எனவே, பொன்முடி மீது குற்ற நடவடிக்கை எடுக்க தகுந்த முகாந்திரம் ஏதும் இல்லை. இம்மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈ.வெ.ரா., - கருணாநிதி குறித்து பேசலாமா?

பாரத் ஹிந்து முன்னணி தலைவர் பிரபு கூறியதாவது: பொன்முடி ஆபாச பேச்சுக்கு, சைபர் கிரைம் போலீஸ் அளித்த பதில் வியப்பாக உள்ளது. '50 ஆண்டுகளுக்கு முன் பேசியதைதான் நினைவு படுத்தியுள்ளார். அதில் தவறு இல்லை' என, காவல் துறை கூறுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன், ஈ.வெ.ரா., பற்றி கருணாநிதி பேசியதையும், தி.மு.க.,வினர் பற்றி ஈ.வெ.ரா., பேசியதையும், இப்போது நாங்கள் பேசினால், அதையும் இதே கோணத்தில் பார்ப்பரா? ஹிந்து அமைப்புகளின் பேச்சாளர்கள் பலர், உண்மையான க ருத்துகளை பேசியதற்காக கைது செய்யப்பட்டு உ ள்ளனர். அந்த வழக்குகளும் இப்படி முடித்து வைக்கப்படுமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

கூத்தாடி வாக்கியம்
ஜூலை 26, 2025 13:06

இதில் தப்பில்லை என்றால் எலேச்டின் நேரத்தில் இதனை திரும்ப திரும்ப ஒளி பரப்பு செய்யலாமா . இதனை போஸ்டர் அடித்து ஒட்டலாமா. அப்போது எந்த பிரச்சினையம் வராது . இந்த மானம் கெட்டவர்கள் கட்சி வளர்த்த லட்சணம் இப்போது புரிகிறதா


ஆரூர் ரங்
ஜூலை 26, 2025 12:16

1949 to 1967 வரை ஈவெரா பற்றி அண்ணாதுரை பேசியவற்றையும் அண்ணாதுரை கருணாநிதி பற்றி ஈவெரா தெரிவித்த கருத்துக்களையும் இப்போது பேசினால் சும்மா விடுவார்களா?. சொல்லலாமா என்று கூட்டத்தினரை பார்த்து பல முறை கேட்ட பின்புதான் பொன்முடி ஆபாசமாகப் பேசினார். அதே போல வான்கோழி கதையைப் பற்றி விலாவாரியாக பேசுவாரா?.


Rajasekar Jayaraman
ஜூலை 26, 2025 10:18

கழக காவல் படையாக செயல்படுகிறது காவல்துறை.


சந்திரசேகர்
ஜூலை 26, 2025 10:06

ஆளும் கட்சிதான் போலீஸ் துறையை நிர்வகிக்கிறது.அப்புறம் இவர்கள் அவர்களின் நலன்களுக்காக மட்டும் தான் செயல்படுவர்.தன்னுடைய போலீஸ் பணியை சரிவர செய்ய முடியாத காரணத்தாலும், ஆளும் கட்சியின் எடுபுடியாக இருப்பதாலும் யாராவது இளிச்சவாயன் கிடைத்தால் மொத்த கோபத்தையும் அவனிடம் காட்டி லாக்கப் பில் இருந்து வெளியே வரும் போது பிணமாக அனுப்பி வைக்கிறார்கள்.ரௌடிகள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு துணையாக இருப்பதால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.


V RAMASWAMY
ஜூலை 26, 2025 08:42

இதே நிலையை அமைச்சர் அல்லாதவராக இருந்தால் போலீஸ் கடைப்பிடிக்குமா?


Chess Player
ஜூலை 26, 2025 08:25

உங்கள் கருத்தை எழுதியதன் மூலம் வெளிப்படுத்தியதற்கு நன்றி. வாக்களிக்கும்போது இதை நினைவில் கொள்வோம். அது மிகவும் முக்கியமானது. இந்து விரோதக் கட்சிக்கு எதிராக இந்துக்கள் வாக்களிக்க வேண்டும்.


Gopal
ஜூலை 26, 2025 07:59

திருட்டு பசங்க


பேசும் தமிழன்
ஜூலை 26, 2025 07:44

அவர் பேசியது முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.... இந்து மதத்தை பற்றி தவறாக பேச வேண்டும் என்றே பேசி இருக்கிறார்.... இந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு !!!


நிக்கோல்தாம்சன்
ஜூலை 26, 2025 05:19

விலை போன காவல்துறை என்று எழுதலாமா ? காவல்துறையினரின் வீட்டு பெண்கள் போமுடியுடன் ஒப்பிட்டு பேசலாமா ? என்ன ஒரு இழிநிலை காவல்துறையில் , இந்த நிகழ்வினை மதத்தினோடு கலந்து பார்க்காமல் ஒரு அமைச்சர் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் , இங்கே சமூக நல்லிணக்கத்தை பொன்முடி கெடுத்து விட்டான் என்பதனை மறந்த காவல்துறைக்கு எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன் , இந்த பொன்முடியை ஆதரிப்பதால் திமுக என்னும் கட்சியை வாழ்நாளில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளுகின்றனர்


Padmasridharan
ஜூலை 26, 2025 05:18

காவலாளர்களே கடற்கரை போன்ற பொது இடங்களில் வருபவர்களை ஒருமையில் அசிங்கமாக பேசுகின்றனர் சாமி. காக்கி உடைக்கும் அரசு வேலைக்கும் அவமானத்தை உண்டு பண்ணுபவர்கள். மேலதிகாரிகளுக்கு ஸலாம் போட்டு சாமானிய மக்களை அதட்டும்/மிரட்டும் இவங்கள யார் விசாரணை பண்ணுவாங்க.


சமீபத்திய செய்தி