உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு: 17 வயது சிறுவன் காயம்

திருநெல்வேலியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு: 17 வயது சிறுவன் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: பாப்பாக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 17 வயது சிறுவன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எஸ்.ஐ., இருதரப்பினர் மோதலை தடுக்க முயற்சித்தார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் எஸ்.ஐ., முருகன் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவரது வீட்டில் பதுங்கி கொண்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gb50rl6t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது 17 வயது சிறுவன் ஒருவரை எஸ்.ஐ., முருகன் பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட மோதலில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த சிறுவன் காயம் அடைந்தான். சம்பவத்தில், எஸ்.ஐ., முருகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, சிறுவன் மற்றும் போலீஸ் எஸ்ஐ ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கூறியதாவது: பாப்பாக்குடியில் எஸ்ஐ முருகன் இருதரப்பு மோதலின் போது, அங்கிருந்தவர்களின் உயிரையும் உடமையும் காப்பாற்றும் நோக்கில் தற்காப்புக்காகவும் துப்பாக்கியால் சுட்டார். அதனை தொடர்ந்து இளம் சிறார்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் காயமுற்ற ஒரு 17 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொருவரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளஞ்சிறார்கள் மீதும் ஏற்கனவே பாப்பாக்குடி போலீஸ் ஸ்டேஷனில் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. குறிப்பாக தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசியது உட்பட நான்கு வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ்வேள்
ஜூலை 29, 2025 19:56

தென் தமிழ்நாடு தொழில் வளமற்று போனதே கலவரங்களுக்கு மூல காரணம்.. திருட்டு திராவிட கட்சிகள் தென் தமிழ்நாடு பகுதியை கலவரக் காட்டவே வைத்திருக்கும்.. அதற்கு குண்டர்களை தருவது தென் தமிழ்நாடு மட்டுமே...அது உருப்பட ஒரேவழி, தெலுங்கானா போல பிரித்து தனி மாநிலமாக ஆக்குவது மட்டுமே... எவனாவது மீசையை முறுக்கி வசனம் பேசி கெத்து காட்டினால் அவனது பத்து விரல்களையும் கதறக் கதற நொறுக்கி பயனற்றது ஆக்கினால் சாதி திருவிழா கூட்டங்களை முற்றிலும் தடை செய்து ஆண்ட சாதி என்று கூறித்திரிபவர்களுக்கு மரண பயத்தை காட்டினால் கடூழிய கேம்ப் அமைத்து சாட்டையடி கொடுத்து கல் உடைக்க செய்தால் அடங்குவதோடு ஒழுக்கம் என்பது என்ன என்று தெரிந்து கொள்வார்கள்.. அடுத்த ஐந்து தலைமுறைகளுக்கு எவனும் திராவிடம் ஆண்டசாதி அண்ணாதுரை கருணாநிதி ராமசாமி என்று பேசவும் கூடாது..மீசை வைக்கவும் கூடாது....அடங்காதவர்களை அடித்துத்தான் திருத்த வேண்டும்..


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 29, 2025 14:59

பாப்பாக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்....தப்பு தப்பு ..கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் .அது துப்பாக்கி சூடல்ல ..துப்பாக்கிமுன் முறைகேடாக வந்து விழுந்த 17 வயது சிறுவன் படுகாயம் என்று சொல்லுங்கள் ..போலீசார் சாப்பிட தோசை சுட்டபோது முறைகேடாக வந்து விழுந்து காயம் பட்டிருக்கின்றான் ...


Rajalakshmi
ஜூலை 29, 2025 14:19

சில மாதங்கள் முன்பு பூமிநாதன் என்ற காவல்துறையை சேர்ந்த அதிகாரியை 3 / 4 சிறுவர்கள் அரிவாள்களால் கொடூரமாக தாக்கி கொன்றனர். Self Defense எனும் உரிமை நிச்சயமாக காவல் துறையினருக்கு உண்டு. ஐயோ பாவம் சிறுவன் சிறுமி என்று தேவையற்ற பச்சாதாபம் கூடாது.


Ramesh Sargam
ஜூலை 29, 2025 12:50

அமெரிக்காவில் தினம் தினம் துப்பாக்கி சூடு பிரச்சினை என்றால், நம்ம திருநெல்வேலியில் தினம் தினம் கத்திக்குத்து, கொலை... இப்ப புதுசா துப்பாக்கி கலாசாரமும். நான் முன்பு கூறியதுபோல திருநெல்வேலியில் பணிபுரிய பல காவலர்கள் விருப்பம் தெரிவிப்பதில்லையாம். அந்த அளவுக்கு திருநெல்வேலி என்றால் காவலர்களுக்கே பயம். திருநெல்வேலி அல்வா வுக்கு பேமஸ் என்பது போய், திருநெல்வேலி அருவா வுக்கு பேமஸ் ஆகிவிட்டது.


Ramesh Sargam
ஜூலை 29, 2025 10:07

திருநெல்வேலியில் தினம் தினம் திக்திக்த்தான்.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2025 09:23

இந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி ஸ்டாலின் பேச மாட்டார். முந்தைய ஆட்சியில் துப்பாக்கி சூடு அதிகாரிகள் இன்னும் நல்ல அரசுப்பணியில் உள்ளனர். ஒருவரும் தண்டிக்கப்பட்ட செய்தியில்லை.


Arul Narayanan
ஜூலை 29, 2025 12:48

என்ன ஸ்வாமி சேம் சைடு கோல் போடுகிறீர்கள்?


Rajalakshmi
ஜூலை 29, 2025 14:24

தூத்துக்குடியில் அநியாயமாக நடந்து கொண்டது போராட்டம் நடத்தியவர்கள்தான். காவல்துறையினரின் வண்டிகளை எரித்தனர். பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா ?


Thravisham
ஜூலை 29, 2025 09:15

திருட்டு த்ரவிஷன்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்


Padmasridharan
ஜூலை 29, 2025 08:59

17 வயது சிறுவனை ஏன் எஸ்.ஐ. பிடிக்க முயற்சி செய்தார் ? பொது மக்களைத்தான் கலைத்துவிட்டுதானே அவர்கள் வேலையை காண்பிக்கின்றனர்.


Shekar
ஜூலை 29, 2025 09:37

அந்த 17 வயது வீரன், அருவாள் கொண்டு எஸ் ஐ யை தக்க முயன்றதாக செய்தி வேறொரு ஊடகத்தில் இருந்தது. அந்த எஸ் ஐ செய்த தப்பு குறி தவறியதுதான். 17 வயதில் அருவாள் துக்கும் ....


புதிய வீடியோ