உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் போலீஸ்

இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் போலீஸ்

சென்னை: சிறிய குற்றங்களில் ஈடுபட்டு, முதல் முறையாக வழக்கில் சிக்கிய இளம் சிறார்கள் மற்றும் 24 வயதிற்கு உட்பட்ட இளம் குற்றவாளிகள் 600 பேரை, நல்வழிப்படுத்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுதும் சிறிய குற்றங்களில் ஈடுபட்டு, முதல் முறையாக வழக்கில் சிக்கிய இளம் சிறார்கள் மற்றும் இளம் குற்றவாளிகள் 600 பேர், சீர்திருத்த பள்ளிகள் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இப்பணியில், காவல் துறை, சிறைத்துறை, சமூக நலத்துறை, தமிழ்நாடு மாநில சட்ட உதவிக்குழு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, மனநல காப்பக அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் வாயிலாக, இளம் சிறார்கள் மற்றும் 24 வயதிற்கு உட்பட்ட இளம் குற்றவாளிகளுக்கு, சிறையிலேயே 'கவுன்சிலிங்' அளிக்கப்படுகிறது. அவர்கள் படிப்பை தொடரவும் வழிவகை செய்யப்படுகிறது. இளம் குற்றவாளிகளுக்கு மனநல ஆலோசனை, மது மற்றும் கஞ்சா போதையில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் இருப்பிட சூழல் அறிந்து, குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இளம் சிறார்கள் மற்றும் இளம் குற்றவாளிகள், உரிய விசாரணைக்கு பின் நீதிமன்றங்களால் விடுவிக்கப்படும் போது, அவர்கள் சுயதொழில் துவங் கவும், தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் பெறவும் உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundarsvpr
அக் 28, 2025 12:24

இளம் கன்றுகள் பயம் அறியாது இவைகள் ஐந்து அறிவு கொண்டவை. ஆனால் ஆறு அறிவு கொண்ட இளம் சிறார்களுக்கு பயம் இருந்தாலும் ஆசையினால் செய்கிறார்கள். நல்வழிப்படுத்தினால். திருந்துகிறார்கள். நல்வழிப்படுத்த முடியாத அரசியல் வாதிகள் தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள் எப்படி? மக்கள் இதில் சேர்த்தி ஐந்து அறிவு கொண்டவர்களா அல்லது ஆறு அறிவுகொண்டவர்களா?


M VASAN
அக் 28, 2025 11:25

ஆக்கபூர்வமான இந்த செயல்களில் ஈடுபடும் அணைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பதவி பரிசு என வழங்கி சிறப்பிக்கவேண்டும்


Ramesh Sargam
அக் 28, 2025 09:37

முதலில் குற்றம் செய்யும் காவலர்கள் திருந்தவேண்டும். பிறகு அவர்கள் குற்றவாளிகளை நல்வழிப்படுத்த முயலலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை