வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யோவ், ரௌடிகளின் ஆட்சியில் சங்கம் இருந்தாலும் பிரயோசனம் இல்லை.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாநில பொதுச்செயலர் கிஷோர் குமார் பேசியதாவது: பொதுமக்களுக்காக, இரவு, பகல் பாராமல் போலீசார் வேலை செய்கின்றனர். ஆனால், போலீசார் மரணத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். இறந்த சண்முகவேல், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதேபோல எஸ்.ஐ., வில்சனை பணியில் இருந்தபோது வெட்டிக் கொன்றனர். யாரும் குரல் கொடுக்கவில்லை. ஹிந்து முன்னணி தான் போராடியது. ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு சங்கம் இருக்கும் போது, போலீசாருக்கும் தங்கள் கோரிக்கையை தெரிவிக்கும் வகையில், சங்கம் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
யோவ், ரௌடிகளின் ஆட்சியில் சங்கம் இருந்தாலும் பிரயோசனம் இல்லை.