உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் பதவி உயர்வு: ஐகோர்ட் கேள்வி

போலீஸ் பதவி உயர்வு: ஐகோர்ட் கேள்வி

சென்னை:கடந்த 2018ல், துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. 13 பேர் இறந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், தனது புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில் வழக்கை முடித்தது.இதை எதிர்த்து ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் விசாரித்தனர். ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, அவர்களே முடித்து வைத்தது சரியா என நீதிபதிகள் கேட்டனர்.துப்பாக்கிச்சூடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்த்து மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 19க்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ