உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 14 இடங்களில் போலீஸ் ரெய்டு!

சென்னையில் 14 இடங்களில் போலீஸ் ரெய்டு!

சென்னை: ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 14 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.கடந்த செப்., 23ம் தேதி, ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா சென்னை நீலாங்கரை அருகே போலீசாரை தாக்கி விட்டு, தப்பிக்க முயன்றார். அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இன்று (நவ.,19) சென்னையில், சீசிங் ராஜா தொடர்புடைய 14 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gj20o54o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை தாம்பரத்தில் உள்ள சீசிங் ராஜா வீடு மற்றும் சேலையூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில், சீசிங் ராஜா உறவினர்களுக்கு தொடர்புடைய வீடுகளில் சோதனை நடந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சீசிங் ராஜா மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 19, 2024 12:10

சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்று பல கொலைக்குற்றவாளிகளின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற வழக்குகளை துரிதகதியில் விசாரித்து ஒன்று தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு, ஜாமீன் ஜாமீன் என்று கொடுத்து, முடிவில் பல வருடங்கள் ஆனபிறகு குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால், இந்த நீதி மன்றம் கொலைக்குற்றவாளியை விடுதலை செய்கிறது என்று ஒரு தீர்ப்பு கொடுக்கும். அப்படி செய்தால், குற்றம் பெருகாமல் குறையவா செய்யும்? நீதிமன்றங்களின் போக்கு மாறவேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 10:57

தேர்தலுக்கு ரொம்ப நாள் இருக்கே, இப்பவே எதுக்கு இந்த காமெடி ஆரம்பிச்சுட்டாங்க?? ஐ டி ஆபீஸில் போரடிக்குதோ??


முக்கிய வீடியோ