உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை

கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பென்சில் தமிழரசன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. திருட்டு வழக்கில் ரவுடி பென்சில் தமிழரசனை கைது செய்ய சென்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சுட்டதில் ரவுடி பென்சில் தமிழரசனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காலில் காயமடைந்த ரவுடி தமிழரசன் கைது செய்த போலீசார் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளது. கைது செய்ய சென்ற போது, தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 19, 2025 13:20

கழகத்திற்கு வாக்களிப்போர் எணிக்கையை குறைப்பதே நோக்கமா ?


rama adhavan
ஜூன் 19, 2025 10:16

ஓ, அவரில்லயா இந்த ரவுடி.


V Venkatachalam
ஜூன் 19, 2025 09:27

புலீஸ் முழு சுதந்திரத்தை அவிங்களாகவே காணாமல் ஆக்கிப்புட்டாங்க. கட்டு மரம் கருணாவின் ராஜ வாழ்க்கையில் புலீஸுக்கு வாரி வழங்கிய சலுகைகளில் புலீஸோட சுதந்திரம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டது. அதன் பிறகு அரசாள வந்த வாரிசு கொஞ்சம் நஞ்சம் இருந்த சுதந்திரத்தை ராக்கெட்டில் ஏற்றி அனுப்பி விட்டார். அதனால் புலீஸ் ரவுடிய சுட்டு பிடிக்கும் நிலமைக்கு ஆளாகி அதுக்கு கேவலமா விளக்கம் குடுக்குற நிலமைக்கும் ஆளாகி விட்டனர். நல்லாட்சிக்கு நான்காண்டுகளே சாட்சி..