உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக புகார் கூறிய போலீஸ் பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக புகார் கூறிய போலீஸ் பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

காரைக்குடி:விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக புகார் கூறிய போலீஸ் பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் பிரணிதா. பிப்.5-ம் தேதி இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி இளையகவுதமன் உள்ளிட்ட சிலர் தாக்கியதாக புகார் தெரிவித்தார். மேலும் அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் சோமநாதபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். இதனிடையே, காவல்நிலைய சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதோடு, பணியில் இருந்த போலீஸார், மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தியதில், உதவி ஆய்வாளர் பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள்முற்றிலும் தவறானது என சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கமளித்தது.இந்நிலையில் உதவி ஆய்வாளர் பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Subramanian N
பிப் 12, 2025 11:27

இதுதான் தரமற்ற திராவிட விடியல் ஆட்சி


Mani . V
பிப் 12, 2025 05:50

எங்களின் மாடல் ஆட்சியில் புகார் சொன்னவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுப்போம். வேங்கைவயல், கள்ளக்குறிச்சி, சோமநாதபுரம்,....... மாடல்னா சும்மாவா?


Bala
பிப் 12, 2025 02:36

அந்த CCTV காமெரா பதிவுகளை பொதுமக்களிடம் காண்பித்தால் உண்மை தெரியும்


Raj S
பிப் 12, 2025 00:07

ஹா ஹா ஹா... எப்படி நம்ம விஞ்சாண ஊழல் திலகம் கட்டுமர கும்பலின் விசாரணை... ஓட்டு போட்டானுங்கயில்ல நல்ல அனுபவிக்கனும்... சோத்துக்கு சிங்கி அடிச்சி ஒவ்வொரு வருடம் மழைக்கும் போராடி ஒரு கோபாலபுர திருட்டு குடும்பத்துக்கு அடிமையா இருக்கணும்...


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 11, 2025 22:20

திராவிடம் செழித்து வளர்ந்து உள்ளது


V வைகுண்டேஸ்வரன்
பிப் 11, 2025 22:50

இப்போ மட்டும் திராவிடமா? தைப்பூசம் விழாவில் பக்தர்கள் கூட்டம் னா இந்துக்கள். இதுக்கு திராவிடமா? என்னய்யா உங்க நியாயம்?? விசிக தலைவர் திருமா இப்போ சங்கிகளின் லிஸ்டில் சேர்ந்து விட்டதால் இனி இப்படி நடந்துகொள்வதில் ஆச்சரியம் இல்லை.


முக்கிய வீடியோ