| ADDED : அக் 03, 2025 12:36 AM
சென்னை: 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாளில், நேற்று அரசியல் தலைவர்கள் வெளியிட்ட புகழாரம். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அன்றாட நாட்டு நடப்புகளை, செய்திகளை, சாமானிய மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில், 'தினமலர்' நாளிதழை நிறுவி, திறன்மிகு தின நாளிதழாக இயக்கிய டி. வி.ராமசுப்பையர் பிறந்த நாளில், இதழியல் துறையில், அவரின் சாதனைகளை நினைவு கூர்கிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jr2d4jod&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன்: 'தினமலர்' நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், தமிழர்களுக்கு அனைத்து கல்வியும் தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காக, பத்திரிகை துறையில் தனது வாழ்நாள் முழுதும் கடுமையாக உழைத்தவர். கேரள மாநிலத்துடன் இணையவிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை, தமிழகத்தில் இணைக்க போராடிய போராளி. அவருடைய புகழ் என்றும் வாழும். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அ ண்ணாமலை: ஊடகப்பணி மட்டும் அல்லாது, சமூக நலப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டவர். விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுத்தவர். கன்னியா குமரி மாவட்டத்துக்கும், திருவனந்தபுரத்துக்கும் இடையே ரயில் போக்குவரத்து கொண்டு வர முழு முயற்சி எடுத்தவர். சிறந்த தேசியவாதியும் , ஆன்மிகவாதியுமான டி.வி.ராமசுப்பையர் புகழ் என்றும் நி லை த்திருக்கும்.